பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தொலை உலகச் செலவு முதலாகக் குறிப்பிடப் பெறுகின்றது. இந்நூலில் இன்னெரு கற்பனை வானவூர்தியும் குறிப்பிடம் பெறுகின்றது. இவ்வூர்தி கதிரவனின் வெப்பத்தைப் பெற்று இங்ங்குகின்றது. இதற்கு ஏற்ற அமைப்பு இந்நூலில் வருணிக்கப் பெறுகின்றது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் புதினப் படைப்புகளின் வளர்ச்சியில் சிறிது மந்ததிலே காணப் பெற்ருலும், இந் நூற்ருண்டின் பிற்பகுதியில் விண்வெளிச் செலவு பற்றிய புதினங்கள் மீண்டும் கிளேத்தெழுந்தன. கி. பி. 1865இல் ஜூல்ஸ் வெர்ன் (Jules Werne) என்ற பேராசிரியர் எழுதிய பல சுவையான நூல்கள் கற்பனை ஊற்றில் தோன்றியவையே. எனினும், அவை அறிவியலே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவை படிப்போரிடையே பரபரப்பை ஊட்டுகின்றன. பூமிக்கடியில் புதைக்கப் பெற்றுள்ள பீரங்கியைச் சுட்டதும் அதிலிருந்து கிளம்பும் விண்வெளிக்கலம் திங்களே தோக்கிச் செல்லுகின்றது. இப் பீரங்கி 270 மீட்டர் நீளமும் 88,000 டன் எடையும் கொண்டது. இவருடைய விண்வெளிக் கலத்தின் பல்வேறு பொறியமைப்புகள் பொருத்தப் பெற்றுள்ளன. அக் கலம் அலுமினியத்தாலானது. விண் வெளியை அடைந்ததும் அஃது இராக்கெட்டுகளிளுல் செலுத்தப் பெறுகின்றது. பேராசிரியர் மைத்துனர் ஒரு வானதுல் வல்லுநராதலின் அவர் ஆயத்தம் செய்த பல்வேறு கணக்கீடுகளும் விண்வெளிக்கலம் செல்ல வேண்டி: வேகமும், பிற விவரங்கள் பற்றிய குறிப்புகளும் நூலில் காணப் பெறுகின்றன. கி. பி. 1901இல் எச். ஜி. வெல்ஸ் எழுதிய "திங்களே அடைந்த முதல் மனிதர்கள்' என்ற நூலும் வேறு பல நூல்களும் விண்வெளிச் செலவு பற்றியனவே. இவற்றைத் தொடர்ந்து வேறு பல அறிஞர்களும் பல வகையான கற்பனை வியங்களே வெளியிட்டுள்ளனர். - :V. இதுகாறும் கற்பனையாக இருந்து வந்த கருத்துகள் செயல் வடிவில் உருப்பெறத் தொடங்கின. இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் புதிய திசையில் ஆராய்ச்சிகள் செல்லலாயின. அறிவியலறிஞர்களும் பொறியியல் வல்லுநர்