பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயணத்தின் பயன் 167 பயன் விளைவிப்பவை. இவை தமது புவிக்கோளையும் அதன் அருகிலுள்ள விண்வெளியின் திலேமைகளைப்பற்றியும் பல புதிய தகவல்களைத் தருகின்றன. கதிரவனின் வெப்பத்தைப் பூமி எந்த அளவிற்கு உறிஞ்சுகிறதென்றும், உறிஞ்சிய வெப்பத்தை எந்த அளவிற்கு உமிழ்கின்றதென்றும் அவை கணித்துள்ளன. உலகிற்கான வானிலே அறிவிப்புகளை மூன்று திங்கள் கட்கு முன்னதாகவே கணித்து உலகின் எப் பகுதிகட்கு வேண்டு மாயினும் அனுப்ப இயலும் என்று கூறுகின்றனர். செய்திப் போக்குவரவுத் துறையில் ஏற்பட்டுள்ள நன்மைகள் சொல்லுந்தரமல்ல. அமெரிக்கர்கள் இயக்கிய ட்ெல்ஸ்டார் வரிசைத்துணைக்கோள்கள் இதில் பெரும்பணி ஆற்றியுள்ளன. வானுெலிச் செய்திகளை நெடுந்தொலைவி லுள்ளவர்கள் கேட்பதுபோலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர்கள் நெடுந்தொலைவில் காண முடியாது. வாளுெலி திகழ்ச்சிகட்குப் பயன்படும் குற்றலைகளே அயனிமண்டலம் திருப்பம் செய்வது போல், தொலைக்காட்சிகளைப் பரப்பப் பயன் படும் நுண்ணலைகனை (Micro-waves) அது திருப்பம் செய்வ தில்லை. ஆகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 160, 320 கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் தான் எட்டுகின்றன. இதற்கு மேலும் எட்டுவதற்கு அமெரிக்க டெல்ஸ்டார் வழிவகுத் துள்ளது. காட்சிகள் நுண்ணலேகளாக மாற்றப்பெற்று டெல்ஸ்டாருக்கு அனுப்பப்பெறுகின்றன. டெல்ஸ்டார் அவற்றை ஏற்றுக் கோடிக்கணக்கான அளவிற்குப் பெருக்கி, புவியை நோக்கி அனுப்புகின்றது. புவியில் எங்குவேண்டு மாலுைம் அவற்றை ஏற்றுத் திரையிடலாம். இரஷ்யாவிலும் மோல்னிய வரிசைத் துணைக்கோள்கள் இப் பணியை ஆற்று கின்றன. வருங்காலத்தில் இத் துறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படலாம். உலக அளவில் பேரண்டத் தகவல் தொடர்பு கொள்வதற்கு இத் துணைக்கோள்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம். . அமெரிக்கர்கள் இயக்கியுள்ள டிரான்ஸிங் (Transit) வரிசைச் செயற்கைத் துணைக்கோள்கள் நடுக்கடலில் நள்ளிரவில் மூடு