பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重惑墨 தொலே உலகச் செலவு பணியால் சூழப்பெற்துத் தாம் செல்லும் திசையறியாது அல்லற். படும் மாலுமிகட்கு உறுதுணையாக நின்று திசையைக் காட்டி வல்லவை. இப் பயனச் சிறிது என்று சொல்ல முடியுமா? மேலும் ஒரு சில ஆண்டுகளில் அமைக்கப்பெறவிருக்கும் சுழலும் விண்வெளி கிலேயங்களும், மனிதன் கால் வைத்து விட்ட திங்களும் பிறகோள்களுக்குச் செல்லும் நமது பயணத் திற்குத் தங்கு துறைகளாகப் பயன்படப் போகின்றன. இதுகாறும் ஆராய்ச்சித் துணைக்கோள்களைக் கொண்டு அறியப் பெற்றுள்ள பூமியைச் சூழ்ந்துள்ள வான் அல்லன் கதிர்வீச்சு வகுைழல், அபனிமண்டலத்தின் பண்புகள், புவிக் காத்த மண்டலத்தின் இயல்புகள், விண்கற்களால் நேரிடும் அல்லல்கள் ஆகியவை தமது அறிவியல் அறிவினை கணிசமான அளவிற்கு வளர்த்துள்ளன. இவை தொலேவுலகப் பயணத் திற்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். இன்று மனிதன் செயலாற்றி வரும் பல்வேறு துறை கட்கும் விண்வெளி ஆராய்ச்சி அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்தது. கணிதம், பெளதிகம், வேதியியல், உயிரியல், கருத்துவம், உலோக உற்பத்தி, தானியங்கிப் பொறியியல், மின்னணுவியல், இராக்கெட்டு துட்பவியல், பொறியியலின் பல்வேறு துறைகள் ஆகிய அனைத்திலும் கைகூடியுள்ள மிகச் சிறந்த வெற்றிகளை விண்வெளி ஆராய்ச்சித் துறை பயன்படுத்திக் கொள்கின்றது. அதே சமயத்தில் இந்த ஆய்வுத்துறை புவியைச் சூழ்ந்துள்ள புறவெளியின் நிலைமைகள் பற்றிய புதிய மெய்ம்மைகளைக் கண்டறித்து கூறிப் பல்வேறு அறிவியல் துறைகளைப் பாங்குற வளர்த்துச் செம்மை செய்து வருகின்றது. புதிய அறிவியல் போக்குகனே உருவாக்கித் தருகின்றது, பல்வேறு அறிவுத் துறைகளையும் முன்னேறச் செய்கின்றது. திங்கள் மண்டலச் செலவு சாத்தியமான பிறகு விளையும் நன்மைகளும் அறிவியல் முன்னேற்றம் பற்றியவை. காற்றும் நீரும், உயிரினங்களும் இல்லாத பாழிடத்தையுடைய அங்குக்