பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயணத்தின் பயன் 重铬器 குடியேறலாம் என்று எண்ணுவதற்கில்லை. திங்கள் மண்டலம் காற்று இல்லாத வெற்றிடமாதலால் அது வெற்றிட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், வானதுரல் உற்று நோக்கல்களே நடத்தவும் வியத்தகு வாய்ப்பினை நல்கும். பூமியில் ஆற்றல் மிக்க தொலைநோக்கிகளாலும் கான முடியாத சில தகவல்களே அங்குக் கண்டு அறியலாம். பூமியில் நாம் அடர்ந்த வளிமண்டலத்தைத் துனேத்துக் கொண்டு பார்க்க நேரிடுவதால் செவ்வாயின் "வாய்க்கால் களைப் பற்றித் தெளிவாக வரையறுக்க முடிகின்றதில்லே. திங்கள் மண்டலத்திலிருந்து உற்றுநோக்கிளுல் அவற்றைப் பற்றிய தெளிவான கருத்தினைப் பெறலாம், திங்களில் வளி மண்டலம் இல்லையாதலின் கதிரவனின் வெப்பத்தை நேரடியாக ஏற்று அவற்றை வேறுவகை ஆற்றலாக மாற்றிச் சேமித்துப் பூமிக்குக் கொண்டு வரலாம் என்றும் இப் புதிய ஆற்றல் இன்றைய உலகினைப் பெரிய அளவுக்கு மாற்றிவிடும் என்றும் அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். புறவெளியில் மனிதன் ஊடுருவிச் செல்லுங்கால் அவன் அறிந்திராத நிகழ்ச்சிகள் பலவற்றைக் காண்கின்ருன். முன்னதாகவே வரையறுத்துக் கணிக்க முடியாத பல பிரச்சினைகளும் அவ்வப்பொழுது எழுகின்றன. இதகுல் இயற்கை விதிகளேப் பற்றிய அறிவு அதிகமாக விரிவடையும் என்பது தெளிவு. கோட்பாட்டளவிலாவது நமக்குத் தெரிந் திராத விவரங்கள் குறித்துத் தானியங்கிப் பொறிகள் ஆராய்வது சாத்தியமன்று. ஏற்கெனவே நாம் அறிந் துள்ளவை பற்றிதான் இப்பொறிகள் சோதனைகளே நடத்தி நமக்கு விவரங்களைத் தருதல் இயலும். அறியாதனவற்றை மனிதகுல் மட்டிலுமே ஆராய முடியும். காரணம், மனிதனல் மட்டிலுமே எதிர்பாராத முறையில் ஏற்படும் நிலமைகளில் விழையின்றி முடிவெடுத்து அவற்றைச் சமாளிக்க முடியும் ; நம்மைச் சுற்றிலுமுள்ள உலகினை ஆராய்ந்து அறிவதற்கான எல்லா வாய்ப்புகளையும் திறம்படப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பலர் ஒருங்கே பயணம் செய்வதற்குரிய வாஸ்கேங் என்ற விண்வெளிக் கப்பலே இரஷ்யர்கள் அமைத்த பிறகு