பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 தொலே உலகச் செலவு விண்வெளி ஆராய்ச்சிகட்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரித்து விட்டன எனலாம். விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்களை மேற்கொள்ளும் பொழுது குறுக்கிடும் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை, இவற்றை ஒரு தனி மனிதகுல் சமாளிக்கமுடியாது. வானிய லசர்கள், பெளதிக இயலார்கள், உயிரியலாளர்கள், மருத்துவத் துறை அறிஞர்கள், பொறியியல் வல்லுநர்கள், அறிவிய லறிஞர்கள் ஆகியோரின் கூட்டுப்பணிகள் மூலமும், ஒரு முகமான முயற்சிகளின் மூலமும் ஆராய்ச்சிப் பயணத்தின் குறிக்கோள்கள் முற்றுப்பெற முடியும். பல சிக்கலான பணிகளே விண்வெளியில் மேற்கொள்வதற்கும் இப் பயணங்கள் தயாரிப்புக் கட்டங்கனாக அமைகின்றன. விண்வெளியில் முறையான ஆராய்ச்சிகளே மேற்கொள்ளும் காலம் மிக நெருங்கி வந்து கொண்டுள்ளது. பல்வேறு விபத்துகளுக்கும் உட்பட்டுப் பல்லாயிரம் கோடி டாலர்கனேச் செலவழித்துத் திங்களே எட்டிப் பிடித்த தோக்கம் பாது ? அமெரிக்க மக்கள் சார்பில் விண்டின் பி. ஜான்ன்ை தரும் விளக்கம் இந் நோக்கத்தை ஒருஷாது விளக்குகின்றது. அவர் கூறியது : 'விண்வெளியை வெற்றி கொள்வதில்தான் தற்கால நாகரிக மனிதன் பெரு. மிதத்துடனும் பயனுள்ள வகையிலும் ஈடுபடமுடியும்; நாடுகளே வெற்றி கொள்வதில் அல்ல. இந்தப் போராட்டத்தில் மனிதகுலம் முழுவதுமே நேச நாடுகளைச் சேர்ந்தவர் களாகின்றனர். அவர்களின் ஒரே எதிரி பகைமை பாசாட்டும் விண்வெளிச் சூழலே, இந்த எதிரியை வென்று வாகை குடிளுல் அந்த வெற்றி உலகம் முழுவதற்கும் சொந்தமாகும்." எவ்வளவு உலக ஒருமைப்பசடு நிறைந்த கூற்று ! மனித இயல்பு இதுதான் : பல நெருக்கடிகளே அவளுல் பொறுத்துக் கொண்டிருத்தல் முடியாது. தேக்கமடைந்து நின்று விடுவதற்கு அவன் விரும்புவதில்லை. பேரண்டம் முழு வதையும் தன் சித்தத்திற்கு உட்படுத்துவது குறித்துக் கனவு.