பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வளிமண்டலக் கடல் நாம் வாழும் பூமி விண்வெளியில் மிதந்து கொண் டுள்ளது. அது தன் அச்சினின்றும் திரும்புங்கால் அதன் ஒரு பகுதி கடும் வெப்பத் தன்மையுள்ள கதிரவனின் கருணை வற்ற கதிர்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றது : ஆந்தி வெப்பம் பூமியில் வாழும் உயிரினங்களே வாட்டிவதக்கிச் சாம்பலாக்கிவிடும். மற்கிருரு பகுதி மிகக் கடுங்குளிரின் தாக்குதலுக்கு இலக்காகின்றது ; அந்நிக் உயிரினங்களைப் பணிக்கட்டிபோல் உறையச் செய்துவிடும். ஆயினும், உயி சினங்கள் இந்த இரண்டுவித தாக்குதலுக்கும் இலக்காவ தில்லை. இங்ஙனம் திகழாததன் காரணத்தை அறிந்து கொள்ள நாம் பேரவாக் கொள்ளுகின்ருேம். தம்மைச் சுற்றியுள்ள அளிமண்டலமே (Atmosphere) ஒரு காப்புறையாக அமைந்து இந்த விபத்துகளைத் தவிர்க்கின்றது. இத்தக் காற்றுமண்டலத்தைப்பற்றி நாம் ஒரளவு அறிவோம். ஆயினும், விண்வெளிப் பயணிகள் இதனைப்பற்றி இன்னும் தன் ருக, விரிவாக, தெளிவாக அறி. வேண்டுவது மிகவும் இன்றியமையாதது. அதிலும் முக்கியமாக 480 கி. மீ. கட்கு அப்பால் - புறவெளியின் எல்லேயில் - நிலவும் திலேமைகனேப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அறிந்துகொள்ளுதல் வேண்டும். - நாம் வளிமண்டலக் கடலின் அடிமட்டத்தில் வாழ் கின்ருேம். பூமியின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள வளிமண்டலம் தம் தலேக்குமேல் உள்ளது. இராக்கெட்டில் செல்வோரின் பயணம் இங்கிருந்து தொடங்கி இவ் வளிமண்டலக் கடலைக் கடந்து சென்று திரும்பும் பயணம் இவ்விடத்திலேயே முற்றுப் பெறுகின்றது. இந்த வளிமண்டலத்தைக் கடந்து அப்பால் செல்வதற்கு முன்பதாக இந்த வளிமண்டலக் கடலே எங்ஙனம் கடப்பது என்பதை முதலில் அறிந்து கொள்ளுதல் வேண்டும். Ա* o