பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளிமண்டலக் கடல் 9 இக் காற்றுக் கடலின் மிக்க உயரத்தில் வீசும் காற்றுகள், இதன் பல்வேறு வெப்பநிலை மாறுபாடுகள், பல்வேறு அடுக்கு களில் இதன் திண்மை, இதன் மின் - நிலை மாற்றங்கள், வேதியியல் - நிலைமாற்றங்கள் ஆகிய இவற்றைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அறிந்து கொள்ளல்வேண்டும். மேலும், கதிரவன் காலும் புற ஊதாக் கதிர்கள் (Ultra - violet rays) eigiri.5; 85igit (Cosmic ray8) sgu-rgy logog3ursi) வீழும் விண்கற்கள் (Meteor) ஆகியவை பற்றிய விரிவான தகவல்கள் மிகமிகத் தேவை. வளிமண்டலத்தின் திண்மை யான அடிப்பகுதியிளுல் நாம் இவற்ருலேற்படும் இடர்ப்பாடு னின்றும் தவிர்க்கப் பெறுகின்ருேம். விண்வெளிக் கப்பலில் செல்வோருக்கு இத்தகையதொரு பாதுகாப்பு இராது. - - - 差卖 விண்வெளிப் பயணத்திற்கு மேல்வளிமண்டலத்தைப் பற்றிய இத்தகைய தகவல்கள் பயன்படுவதோடன்றி வேறு பல காரணங்களுக்காகவும் இவை இன்றியமையாததாகின்றன. இவை தெளிவான காலநிலை முன்னறிவிப்புகளுக்குப் பெரிதும் பயன்படக் கூடும். ஒருவேனே ஓராண்டிற்குப் பின்னர் நிலவக் கூடிய காலநிலையினை முன்னதாகவே கணித்து அறிவிக்கக் கூடிய நிலைமையும் ஏற்படலாம். இன்னுத் மேல்வளிமண்டலத் தின் மின்னுற்றல் பெற்ற அடுக்குகளால் திருப்பம் (Reflection) அடையும் வானுெலி அலைகளைப்பற்றி (Radio waves) பல விவரங்களை அறிந்து கொள்ளும் நிலமை ஏற்படுங்கால் வானெலி தொலைக்காட்சி ஆகிய கருவிகள் மேலும் பல மேம்பாடுகளுடன் அமைதல் கூடும். ஒருவேளை வடதிசையில் தென்படும் விண்னுெளிகளினின்றும் (Northern Lights) பல இரகசியங்களே அறிவதற்கும் இவற்றின் காரணமாக நம்முடைய நகர்ப் புறங்களிலும் இல்லங்களிலும் புதிய முறைகளில் விளக்குகளே அமைப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், வானில் மிதந்து செல்லும் பலூன்கள், இராக்கெட்டுகள், துணைக்கோள்கள் ஆகியவை இன்று முக்கியமான எட்டுத் தகவல்களைத் திரட்டப் பயன்படுத்தப்பெறுகின்றன. அவை :