பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝鳕 தொலே உலகச் செலவு பல்வேறு உயரங்களில் வளிமண்டலத்தின் அமைப்பு (Composition) வெப்பநிலை, திண்மை, மின்சார நிலைகள், பூமியின் காந்தப்புலன் விளைவு, கதிரவனிடமிருந்து வரும் கண்காணு புறஊதாக்கதிர்கள், அண்டக்கதிர்கள், விண் கற்கள் ஆகியவை. மிக உயரங்களிலிருந்து பூமியின் ஒளிப்படிங் களே (Photographs) எடுக்கவும் இராக்கெட்டுகள் பயன்படுத்தப் பெறுகின்றன. x} இன்று அறிவியலறிஞர்கள் வளிமண்டலத்தை ஐந்து அடுக்குகளாகப் பிரித்து அவற்றிற்குத் தனித்தனித் துறைப் பெயர்களிட்டு வழங்குகின்றனர். . ... . முதலாவது : பூமியையொட்டி இருக்கும் அடுக்கினே அடிவளிகண்டின் 'pைosphere) என்று வழங்குகின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து சற்றேறக்குறைய 13 கி. மீ. உயரம் வரை உள்ள பகுதியாகும். காற்றின் ஐந்தில் நான்கு பகுதி இந்த அடுக்கிளுல் நிரப்பப் பெற்றுள்ளது. இந்த அடுக்கின் அடிமட்டத்தில்தான் நாம் வாழ்கின்ருேம், இஃது அமைதி:ற்ற, கோந்தளிப்புள்ள பூமண்டலத்தைச் சூழ்ந்துள்ள வளிமண்டலப் பகுதியாகும். இப் பகுதியில்தான் மேகங்கள் உண்.ாகின்றன. இங்குத்தான் காலநிலையும் உற்பத்தியாகின்றது. கழல் காற்றுகள், புயல்கள், கண்ணேப் பறிக்கும் பனிப்புயல்கள், குருவளிகள், பருவக்காற்றுகள், பிரசண்டமாருதங்கள் ஆகியவையாவும் இங்குத்தான் உருவா கின்றன. இவற்றின் காரணமாகவே ஆதிமனிதன் அடக்க மாக முடங்கிக் கிடப்பதற்கேற்ப இல்லங்களே அமைத்துக் கொண்டான் என்பதில் நாம் வியப்பெய்த வேண்டியதில்லை. நாம் உயரமானதொரு மலேயின் மீது ஏறும்பொழுது மலையுச்சியில் சுவாசிப்பதில் சிறிது தெருக்கடியை உணர் கின்ருேம். மேலும், மலையின் மிக உயர்ந்த கொடுமுடிகள் ஆண்டு முழுவதும் உறைபனியால் மூடப்பெற்றிருக்கும். அடிவளி மண்டலத்தில் மேலே போகப்போகக் காற்றின் திண்மை குறைந்துகொண்டே போவதோடன்றிக் குளிரும் அதிகமாகிக் கொண்டேபோவது இந்நிலமைகள் ஏற்படு: