பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நம் அண்டை, உலகுகள் ஒரு காலத்தில் மக்கள் பூமியே இந்த அகிலத்தின் மையம் எனக் கருதினர். கியார் ஜே பிருதுே (oேrdan Bruno) போன்ற பேரறிவு படைத்த தனிப்பட்ட அறிவியலறிஞர்கள் மட்டிலுதுே. இப் பூமி இந்தப் பெரிய அகிலத்தின் ஒருபுள்ளி என்ற கருத்தினை உடையவராக இருந்தனர். மேலும், அவர்கள் இந்த விண் வெளியில் காணப்பெறும் கணக்கற்ற உலகங் களில் உயிர்கள் வாழ்கின்றன என்றும், அந்த உலகுகளில் உள்ளவர்கள் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்னும், ஒருகால் அவர்கள் தம்மைப் போலல்லாது இருத்தல் கூடும் என்றும் கருதி வந்தனர். இக் கருத்து நினைப்பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னர் திலவி வந்த கருத்தாகும். அக் காலத்திலிருந்து வந்த கருத்து இன்று எவ்வளவு தூரம் மாறியுள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அறிவியல் இன்று மிக வேகமாக முன்னேறிக்கொண்டு வருகின்றது. மனிதன் இயற்கையைப்பற்றி நாடோறும் அதிக மாகவே அறிந்துகொண்டு வருகின்ருன். எதிர்காலத்தில் மக்கட்கு இவ்வுலக வாழ்வு தனித்திருக்கும் வாழ்வு போல் தோன்றக் கூடும் ; இந்த உலகம் மக்கட்கூட்டம் மிக்க உலகாகக் காட்சி அளித்தல் கூடும். அக் காலத்தில் அவர்கள் பகலவனே அண்டியுள்ள பிற உலகங்களே விண்வெளிக்கப்பலில் சென்று பார்வையிடலாம் ; ஒருகால் அவர்கள் எல்லையற்ற விண்வெளியில் மேலும் சென்று வேறு சூரியர்களின் இருப் பிடங்களுக்குச் சென்று வரும் நாளும் மிக அண்மையில் இருக்கலாம். தென. உ. செ.-3