பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் தொலையுலகப் பயணத்தில் பங்குபெறும் செயற்கைத் துணைக்கோள்கள், விண்வெளிக்கலங்கள் இவற்றின் இயக் கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் சில அடிப்படையான அறிவியல் மெய்ம்மைகளே அறிந்துகொள்ள வேண்டும். இவற்றினை விண்வெளியில் கொண்டுசென்று வீசி யெறியும் இசிக்கெட்டுகளின் இயக்கத்தை இராக்கெட்டுகள் என்னும் நூலில் கண்டுகொள்க. இந்த மெய்ம்மைகளை ஈண்டு விளக்குவோம். புவிஈர்ப்பு ஆற்றல் : இந்த அகிலத்திலுள்ள பொருள்கள் பிறபொருள்களைக் கவர்த்து நிற்கின்றன. இவ்வாறு கவர்ந்து திற்கும் விசையை சர் ஐசாக் நியூட்டின் என்பார் ஈர்ப்பு ஆற்றல் (Force of gravity) என்று வழங்கிஞர். இந்த ஈர்ப்பு ஆற்றல் கவர்த்து நிற்கும் இரு பொருள்களின் பொருண்மைகளின் (Masses) பெருக்கற் பலனுக்கு (Product) நேர்விகித சமப் பொருத்தத்திலும் அவற்றின் இடையிலுள்ள தூரத்தின் வர்க்கத்திற்குத் (Square) தலைகீழ்விகித சமப் பொருத்தத்திலும் உள்ளது என்று எடுத்துக் காட்டிஞர். . இதனை மேலும் சிறிது எளிமையாக விளக்குவோம். ஈர்ப்பு ஆற்றலின் விசையே பொருள்களின் எடிை (Weight) ஆகும். ஒருவரின் எடை 60 கிலோ கிராமாக இருந்தால், அவர் பூமியின் மையத்தை தோக்கி 60 கிலோ கிராம் விசையுடன் இழுக்கப் பெறுகின்ருர், அவரும் பூமியை 60 கிலோ கிராம் விசைவுடன் இழுத்தவண்ணமிருக்கின்ருர்; ஆளுல் இந்த இழுப்பு விசையைச் சரியாகக் கவனித்து அறிய முடிவதில்லை. i. ಔಷ೬ (கழக Gssfటి@) பக் (8.84)