பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*笼穆 தொன்ல உலகச் செலவு ஆடிருப்பதால் இஃது இப் பெயரினைப் பெறுகின்றது என்பதை தாம் நினைவு கொள்ளவேண்டும். ஒலி ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்து செல்லும் நெருக்கப் பெற்ற அலைகளாகப் பரவு கின்றது என்பதை நாம் அறிவோம். அஃதாவது, காற்றின் மூலக்கூறுகள் நெருங்கி யிருக்குமாறு தள்ளப் பெறுகின்றன ; இந்த நெருக்கமான பகுதிகள் ஒலியின் மூலத்தினின்றும் வெளிப்புறமாகப் பரவுகின்றன. ஒரு விமானம் ஒலி வேகத்தைவிடக் குறைவான வேகத் துடன் செல்லும்பொழுது விமானத்தினின்றும் புறப்படும் காற்ற இலகள் விமானத்திற்கு முன்னதாக வேகமாக விரைந்து செல்லுதல்கூடும். ஆகுல், விமானம் ஒலியின் வேகத்திற்கு அதிகரித்துக்கொண்டே செல்லும்பொழுது, அஃது ஒலியலை களுடன் இணைந்து செல்லுகின்றது. இந்நிலையில் நெருக்க முள்ள காற்றல்கள் விமானத்திற்கு முன்னதாகச் செல்ல முடிவதில்லை. ஆகவே, அவை விமானத்தின் இறக்கைகட்கு முன்புறமும், அதன் உடலின் (Fuselage) முன்புறமும் குவிகின்றன. இதன் விளைவாக ஓர் உயர் அமுக்கமுள்ள காற்றுச் சுவர் விமானத்திற்கு முன்புறம் குவியலாக அமைகின்றது. இப்பொழுது விமானம் மிக விரைவாகச் செல்ல முயன்ருல் அஃது இந்தச் சுவரை உடைத்துக் கொண்டு சென்ருக வேண்டும். இந்தச் சுவதை விமானத்தி லிருந்து கொண்டு உடைப்பதென்பது அருஞ்செயலாகும் ஒலியின் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் விமானம் செல்லும்பொழுது அஃது ஒலியலைகளைத் தன் பின்னே விட்டுவிடுகின்றது ; அவை அங்கு விமானத்திற்கு எவ்விதமான சங்கடத்தையும் விளைவிக்க முடியாது. விமானம் காற்றுத் தடையினுள் செல்லும்பொழுது அதன் வேகத்தை வளர்த் தாலும் அல்லது குறைத்தாலும் நெருக்கமுள்ள ஒலியலைகள் குறுக்கிடுகின்றன. ஆகவே விமானம் ஒலி வேகத்தில் பறப்பதைத் தவிர்த்தல் வேண்டும், அஃது ஒலி வேகத்தினும் விகுதியான வேகத்திலோ அல்லது அதனினும் குறைவான வேகத்திலே தான் பறக்கவேண்டும். ஒலிக்குக் குறைவான