பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் 39 வேகத்தினின்றும் ஒலிக்கு மிகுதியான வேகத்தை அடைய வேண்டிய திலே ஏற்பட்டால், அது மிக விரைவில் அந்த வேகத்திற்கு மாறிவிடுவது சிறப்பாகும். இதற்கு மேலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒலியின் வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு 13 கீ. மீட்டர் உயரத்தில் அதன் வேகம் மணிக்கு 1,058 கி. மீட்டராக இருக்கும், ஒலியின் வேகம் காற்றின் வெப்பதிலேயையும் பொறுத்துள்ளது. குளிர்ந்த காற்றில் ஒலியின் வேகம் குறைவு. இன்னும் மேலே, காற்று மேலும் அதிகக் குளிர்ச்சியாகவும் இலேசாகவும் உள்ளது. காற்றின் அடர்த்தியால் யாதொகு சங்கடமும் இல்லை. அதனுடைய வெப்பதில் மட்டிலுமே பாதிப்பினை விளைவிக்கின்றது. இன்று அறிவியலறிஞர்கள் புதிய புதிய விமான வடிவங்களைப் படைத்து இத் தடையை ஓரளவு சமாளித்துள்ளனர். இதே விதியை மனத்தில் கொண்டுதான் இராக்கெட்டின் வடிவமும் அமைக்கப்பெறுகின்றது. வெப்பத்தடிை அடுத்து சமாளிக்க வேண்டுவது வெப்பத் தடிை (Heat barrier) ஆகும். உண்மையில் அஃது ஒரு தடை யன்று. ஏனெனில், அஃது ஒரு திட்டமான வேகத்தாலோ அல்லது உயரத்தாலோ ஏற்படுவதில்லே. காற்றின் உராய்வால் விமானம் சூடேறத் தொடங்கியதும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமும் அதிகரிக்கின்றது. இக் காரணத்தால் விமானிகள் இந் திகழ்ச்சியை 'வெப்பத் தாக்குதல்' என்று வழங்குகின்றனர். கடல் மட்டத்தில் மணிக்கு 1,120 கி. மீ. வேகத்தில் செல்லும் ஒரு விமானம் காற்றின் உராய்வால் காற்றின் வெப்பநிலையைவிட 180°F சூடேறிவிடுகின்றது என்று கணக்கிட்டுள்ளனர். இதனுடன் பகலவன் வெப்பத்தையும், இயக்கும் பொறிகளின் வெப்பத்தையும், இவை போன்ற பிறவற்றையும் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். இதனுல், விமானம் வெப்பத்தால் வசதி குறைவற்றதாகிவிடுகின்றது. இசாக்கேட்டுகளோ விமானத்தைவிட மிக வேகமாகக் காற்றினூடே செல்லுகின்றன ; மிக உயரத்திற்கும் செல்லு