பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொலை உலகச் செலவு கின்றன. இராக்கேட்டு விமானம் வளிமண்டலத்தில் அடர்த்தி யான அடுக்குகளினூடே உராய்ந்து செல்லும்பொழுது அது கிட்டத்தட்ட 1800°F அளவுக்குச் சூடேறுகின்றது. இந்த வெப்பத்தைச் சில உலோகங்களே தாங்கக் கூடியவை. தொழில் துணுக்க அறிவு வேகமாக முன்னேறிவரும் இக் காலத்தில் வெப்பத்தினைத் தாங்கி திற்கக் கூடிய புதுப்புது உலோகக் கலவைகள் கண்டறியப் பெற்றுள்ளன. டைட்டேனியம் :Titanium) போன்ற உலோகங்கள் அதிக வெப்பத்தினைத் தாங்குவதால் அது மணிக்கு 1,600 கி.மீ. வேகத்தில் செல்லும் விமானத்தில் பயன்படுகின்றது. இராக்கெட்டுகளில் பல உயர்ந்த கலவை உலோகங்களைப் பயன்படுத்தி இத்தடை சமாளிக்கப்பெறுகின்றது. அட்டவழி இயக்கம் : செயற்கைத் துணைக் கோள்கள் இயங்குவதைப்பற்றித் தெளிவுபெற வேண்டுமாயின் வட்டவழி இயக்கத்தைப் பற்றிய விதியினைப் புரிந்து கொள்ளவேண்டும். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருளின்மீது எவ்வித விசையும் தாக்கவில்லே என்ருல் அது நேர்வழியில் சென்று கொண்டிருக்கும். அது வட்டப் பாதையில் இயங்க வேண்டு டிாயின் ஏதேனும் ஒருவிசை அதனை மையத்தை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்குமாறு செய்தல் வேண்டும். இந்த விசையே மையநோக்கு விசை (Centripetal force) என்று வழங்கப் பெறும். சிறுவன் ஒருவன் நீளமான கயிற்றின் ஒரு நுனியைப் பிடித்துக்கொண்டு அதன் மது துனியில் கட்டப் பெற்ற கன்றுக்குட்டியை மேய்ப்பதற்காகப் புல் வெளிக்கு ஒட்டிப் போகின்ருன். அது கயிற்றை இழுத்துக் கொண்டு நேரே ஒடப் பார்க்கின்றது. சிறுஆன் கால்ே ஊன்றி நின்று கொண்டு கயிற்றை விடாமல் பலமாக இழுத்துப் பிடிக்கின்ருன். கன்றுக்குட்டியும் பலமாக இழுக்கின்றது. இவற்றின் விளைவாகக் கன்றுக்குட்டிசிறுவனச் சுற்றிச் சுற்றி ஓடிவரவேண்டியதுதான். இதில் சிறுவன் கன்றுக்குட்டியை இழுக்கும் விசையே மைய நோக்குவிசையாகும். கன்றுக்குட்டி சுற்றும் வேகம் அதிகமாகுல் தேவையான மையநோக்கு விசையும் அதிகமாக வேண்டும். இப்போது சிறுவன் மேலும்