பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? தொலே உலகச் செலவு மட்டமான திசையில் வேகங் கொடுத்து வீசி யெறிந்தால் அது பூமியை வட்டவழியில் சுற்றிவரும். உயரத்தைப் பொறுத்து அதன் வேகம் அமைதல்வேண்டும். திங்கள் இருக்கும் உயரத்திற்கு அதனைக் கொண்டு, செல்லக் கூடுமாயின் திங்களின் வேகத்தைப்போல மணிக்கு 3,760 கி. மீ. வேகத்தில் இயக்கிளுல் போதுமானது, அது பூமிக்கு மற்ருெரு பிள்ளையாக, திங்களுக்கு ஒரு தம்பிபோல, அமைந்து பூமியைச் சுற்றிவரும். தூரம் குறைந்தால் பூமியின் ஈர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்பதை தாம் அறிவோம். இதைச் சமாளிப்பதற்கு மைய விசையும் அதிகரித்தே ஆகவேண்டும். இல்லேயாவின், அக் கோள் பூமியில் வந்து விழுந்துவிடும். எடுத்துக்காட்டாக, அக் கோள் கிட்டத்தட்ட 480 கி. மீ. உயரத்தில் பூமியைச் சுற்ற வேண்டுமானல், அது மணிக்கு 28,800 கி. மீ. வேகத்தில் இயக்கப் பெறுதல்வேண்டும். ஈண்டு இன்ளுெரு மெய்ம்மையையும் நினைவு கொள்ளல் வேண்டும். துணைக்கோள் இயக்கப்பெற வேண்டிய வேகம் அதன் பருமனையோ எடையையே பொறுத்ததன்று. குறிப்பிட்ட உயரத்தில் கணிக்கப் பெற்ற வேகத்தில் அஃது இயக்கப் பெற்ருல் போதுமானது. துணைக்கோனின் அள விற்கும், அஃது இயக்கப் பெற வேண்டிய உயரத்திற்கும் ஏற்ப உந்து விசை வேற்றுமைகளைக் கொண்ட பெரிய அல்லது சிறிய இராக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே, ஒரு துணைக்கோள் 300 கிலோ கிராமாக இருப்பினும் 10 டன்னக இருப்பினும் ஒரே உயரத்தில் பூமியை வட்டமாகச் சுற்றி வருவதற்கு ஒரே வேகத்தில்தான் இயக்கப் பெறுதல் வேண்டும். அவை பூமியை ஒரு தடவை சுற்றி வருவதற்கும் ஒரே அளவு நேரம்தான் ஆகும். ஆகுல், உயரம் அதிகரித்தால் இயக்கப் பெற வேண்டிய வேகமும் குறைவுபடும். இதனை ஒரு ஆய்பாட்டினுல் (Formula) கணித்துவிடலாம். கிட்டத் தட்ட 35,200 கி. மீ. உயரத்தில் பூமியை வட்டமிடுமாறு _3. வழக்கமாகக் கூறப்பெரும் வேசம் இது. சரியான வேகம் ேே40 கி.மீ. (விநாடிக்கு? 4 கி.மீ.).