பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் 霧籌 ஒரு துணைக்கோனே மணிக்கு 10,180 கி. மீ. வேகத்தில் இயக்கிருல் அது பூமியை 24 மணிக்கு ஒரு தடலை சுற்றும். அதுவும் பூமி சுற்றிவரும் திசையில், அதாவது மேற்கிலிருந்து கிழக்காக, பூமியின் ஒரு கோட்டிற்கு மேலாக இயக்கப் பெறுமாயின், அது பூமியுடன் சேர்ந்து ஒரே வேகத்தில் சுற்றிவரும். ஒரே திசையில் ஒரே வேகத்தில் மிக அண்மையில் ஓடும் புகைவண்டிகளில் ஒன்றிலுள்ள ஒருவர் பிறிதொன்றி லுள்ள மற்ருெருவருக்கு எப்பொழுதும் எதிராகவே இருப்பது போலவே, 85,200 கி. மீ. உயரத்தில் இயக்கப் பெறும் துணைக்கோள் எப்பொழுதும் வானவெளியில் நிலைத்து நிற்பதாகவே காணப்பெறும். அங்ங்ணமே, திங்கள் இருக்கும் உயரத்திற்கு ஒரு துணைக்கோளே எடுத்துச் சென்று மணிக்கு 760 கி. மீ. வேகத்தில் பூமிக்குக் கிடை மட்டமான திசைவில் இயக்கினால், அதுவும் திங்களைப்போலவே கிட்டத்தட்ட 28 நாட்களுக் கொருமுறை பூமியைச் சுற்றி வந்துகொண்டே இருக்கும். - . - - விடுபடுநேர் வேகம்: நாம் ஒரு பந்தினை மேல்நோக்கி வீசி எறிந்தால் அது மீண்டும் பூமியை வந்தட்ைகின்றது. இாம் எவ்வளவுக்கெவ்வளவு சிரமப்பட்டுப் பந்தினை மேல் தோக்கி எறிகின்ருேமோ அஃது அவ்வளவுக்கவ்வளவு மிகவும் உயரத் தில் செல்வதை அறிகின்ருேம். இதற்குக் காரணம் என்ன ? அது புவி ஈர்ப்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு ஆற்றலே முற்றிலும் வெல்ல வேண்டுமாயின், அஃதாவது அப் பந்து மீண்டும் பூமிக்குத் திரும்பாது மேல்தோக்கியே சேன்றுகொண்டிருக்க வேண்டுமானுல், அதனை எவ்வனவு வேகமாகத் தூக்கி எறிய வேண்டும்? இதனைக் கணித முறை வால் கணித்து விடலாம். இந்த வேகத்தின் அளவு மணிக்கு 40,000 கி. மீ. என்பதாகக் கணித்துள்ளனர் அறிவிய லறிஞர்கள். எனவே, ஒரு பொருளை மணிக்கு 40,000 கி. மீ. வேகத்தில் செல்லுமாறு அனுப்பக் கூடுமாயின், அது பூமியின் ஈர்ப்பின் எல்லேயைக் கடத்து விடும் ; விடுபட்டுத் தப்பியோடி விடும். இந்த வேகம் விடுபடுநேர் வேகம் (Escape velocity) என்று வழங்கப்பெறுகின்றது. . . தொ. உ. செ.--.ே