பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் §§ தில்தான் அனுப்பப்பெற்றன என்பதை இவ்விடத்தில் நாம் நினைவுகொள்ளுதல் வேண்டும். பூமியைச் சுற்றி ஒடிவகுமாறு: அனுப்பப்பெறும் செயற்கைத் துணைக்கோள்கள் யாவும் விடுபடும் தேர்வேகத்திற்குக் குறைவான வேகத்தில்தான் இயக்கப்பெறுகின்றன. இவை யாவும் நீள்வம் (Ellipse வழிகளிலேயே இயங்கும். இயக்கப்பெறும் பொருள்களின் வேகங்கட்கு ஏற்றவாறு அவை இயங்கும் நீள்வட்டப் பாதைகளின் பேரச்சு (Major Asis) நீளமாகவோ குதுகியோ இருக்கும். ஒரு செயற்கைத் துணைக்கோளின் சுற்று வழி (Orbit) வட்ட மாக அமைய வேண்டுமாயின் அது கணிக்கப்பெற்ற வேகத்தில் சிறிதும் மாறுதலின்றிப் பூமிக்குக் கிடைமட்டமான திசையில் இயக்கப் பெறுதல் வேண்டும். ஒரு செயற்கைத் துணைக் கோன் கிட்டத்தட்ட 480 கி. மீ. உயரத்தில் வட்ட வழியில் பூமியைச் சுற்றிவரச்செய்ய வேண்டுமாயின், அதனை 480 கி.மீ. உயரத்திற்குக் கொண்டு சென்று அதனைப் பூமிக்குக் கிடை மட்டமான திசையில் மணிக்கு 28,800 கி. மீ. வேகத்தில் வீசி யெறிதல் வேண்டும். சுற்று வேகத்தில் சிறிதளவு மாறுபடி னும், அல்லது செலுத்தப் பெறும் திசையில் சிறிது வேறு படினும் அது சுற்றும் வழி நீள் வட்டமாக அமைந்துவிடும். இதுகாறும் விண்வெளியில் வீசி யெறியப்பெற்ற துணைக் கோள்கள் யாவும் பூகியை நீள்வட்ட வழிகளிலேயே சுற்றி வந்துள்ளன. ஆராய்ச்சியின் நிமித்தம் ஏவப்பெற்ற துணைக் கோள்கள் யாவும் வேண்டுமென்றே நீள்வட்ட வழிகளில் செல்லுமாறு இயக்கப்பெற்றன. வட்டவழியில் சுற்றுங்கால் அவை ஒரே உயரத்தில் நிலவும் வளிமண்டலத்தின் எடுகோள் களை (Data) மட்டிலுமே பதிவு செய்து நமக்குக் கொடுக்கும். ஆகுல், அவை நீள்வட்ட வழிகளில் சுற்றி வருங்கால் அவை ஒரு சமயம் பூமிக்கு அண்மையிலும் பிறிதொரு சமயம் அதன் சேய்மையிலும் வருகின்றனவாதலால் அவை பல்வேறு உயரங்களிலுள்ள அறிவியல் மெய்ம்மைகளை நமக்குக் கிடைக்கச் செய்கின்றன. :