பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. துணைக்கோளினே இயக்குதல் 1857ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் தான் அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி வரலாற்றில் புகழ்மிக்க தானாக இடம் பெற்றது. இரஷ்யர்கள் அனுப்பிய ஸ்பூக்னிக் {Sputnick) கின் ஒலிக்குறிகள் அனைத்துலகையும் களிப்படையச் செய்தன. இரஷ்யர்கள் தமது முதல் செயற்கைத் துணைக் கோளே இயக்கிவிட்ட செய்தியை வானெலியில் கேட்டு உலகமே வியப்புக்கடலில் ஆழ்ந்தது. மனிதனின் கைகளால் ஆக்கப்பெற்ற ஸ்பூத்ணிக் - 1 விண்வெளியுகம் தொடங்கி விட்டதை உலகிற்குப் பறையறைந்தது, விண்வெளிச் செலவு நடைமுறையில் இயலக் கூடியதே என்பதை மெய்ப்பித்தது. இந்தச் செயற்கரிய அருஞ்செயலிற்குக் காரணமாக இருந்த பீட்டிர் கபீட்சாவை அறிவியல் உலகம் வாயா வாழ்த்திப் பாராட்டியது. இரஷ்யர் முதன் முதலாக விண் வெளியில் அனுப்பிய ஸ்பூத்ணிக்-1 கோள வடிவமுடையது. அதன் விட்டம் 58 செ. மீ. பல உலோகத் தகடுகளால் இதன் மேலுறை அமைக்கப் பெற்றது. இத் தகடுகளுக்கிடையே உன்ன காற்று கம்பளத்தைப்போல் உள்ளிருக்கும் கருவிகளின் வெப்பநிலை அதிகமாக மாறுபடாதவாறு பாதுகாக்க வல்லது. அதனுள் பல நுட்பமான கருவிகள் அமைக்கப் பெற்றிருந்தன. வெப்பநிலை, காற்றின் அழுத்தம், காந்றின்