பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జః நூல்முகம் வேண்டும். பல நுட்பமான அறிவியல் உண்மைகளையும் எளிய முறையில் விளக்குவனவாக நூல்கள் அமைதல் வேண்டும். இந்த முறையில் இந்த வரிசையில் வெளிவரும் நூல்கள் பெரும்பணியாற்றும் என்ற நம்பிக்கையுடன் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த நூல் 1970இல் அப்போலோ-1 பயணம் முற்றுப் பெற்ற சில காள்களில் அம்புலிப் பயணம் என்ற நூலுடன் இரட்டைக் குழந்தை போல் பிறந்தது. மூன்ருண்டுகள் இறகுகள் முளேக்காத குஞ்சுபோல் கிடந்து அம்புவிப் பயணம் 1973இல் இறகுகள் மு:ளத்துப் பறக்கத் தொடங் கியது. ஆல்ை, இந்த நூல் செவ்வாய்க்கோள் ஆய்வு வெற் நியை ஏந்திக்கொண்டு பறக்கவேண்டும் என்று காத்துக் கிடந்ததுபோலும் அந்த வெற்றியின் எக்களிப்பினால், இதற்கும் இறகுகள் முளேத்துப் பறக்கத்தொடங்கிவிட்டது. இனி, இந்த இரண்டு நூல்களும் தமிழ்கூறு கல்லுல் கெங்கனும் இராம.இலட்சுமணர்கள் போல் இணைக்கே பறந்து சென்று தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் என்று கம்புகின்றேன். இந்நூலே மனமுவந்து ஏற்று வெளியிட்ட கழகத் திற்கும் சிறப்பாக எண்பது அகவையை எட்டிப்பிடிக்கும் அதன் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் வ. சுப்பைய பின்ன அவர்கட்கும் என் இதயங் கனிந்த கன்றி என்றும் உரியது. இந்த நூல் அச்சுவடிவங் கொள்ளுங்கால் பார்வைப் படிகளைத் திருத்தி உதவிய என் முதல் மகன் செல்வன் S. இராமலிங்கம் M. S. க்கும் என் வாழ்த்து உரியது. இக்துரலை வெளியிடுவதற்கு இசைவு தக்க திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும்