பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்கோளி ைஇயக்குதல் 39. வனே இயக்குவதற்குத் தேவையான மின்கலங்கள் உள்ளே வைக்கப் பெற்றிருந்தன. இக்கருவிகளின் அமைப்புடன் இத் துணைக்கோளின் எடை 83.6 கிலோ கிராம். துணைக்கோன் இயக்கப்பெறும் தத்துவம்: இனி, துனேக் கோள் இயக்கப்பெறும் தத்துவத்தை விளக்குவோம். ஒரு துனேக்கோளின் எடை எவ்வளவாக இருந்தபோதிலும் அஃது இயக்கப்பெற வேண்டிய வேகமும் அதனைச் சுற்று வழியில் இயக்கும் முறையும் ஒன்றே என்பதை ஏற்கெனவே விளக்கி யுள்ளோம். இங்குக் கூறியுள்ள துனேக்கோளை ஏற்றிச் சென்ற இராக்கெட்டு சிறியதாகவே இருந்தது. ஒரு துணைக்கோன ஏற்றிச்செல்லும் இசாக்கெட்டு மணிக்கு 28,800 கி. மீ. வேகத்தை அடைந்தபின்னர்தான் அதனைச் சுற்று வழியில் இயக்கிவிட வேண்டும். அப்போது தான் அது வட்டவழியில் சுற்றி வரும். இத்தகைய கடும் வேகத்தை இராக்கெட்டு அடைவதெங்ங்ணம் என்பதையும் இராக்கெட்டுப் பொறிஞர்கள் கணித்துள்ளனர். அதன்வேகம் அதிகரிக்க வேண்டுமாயின் அதன் பொருண்மை விகிதம் (Mass ratio) அதிகரித்தல் வேண்டும். இராக்கெட்டு பூமியை விட்டு மேலே கிளம்புவதற்கு முன் எரிபொருளுடன் கூடிய அதன் பொருண்மைக்கும் எரிபொருள் தீர்ந்தபிறகு உள்ள எஞ்சிய பொருண்மைக்கும் உள்ள விகிதமே அதன் பொருண்மை விகிதம் ஆகும். சாதாரணமாக இராக்கெட்டி லுள்ள எரிபொருளின் பொருண்மை மட்டிலும் 75% இருக்கும். அதன் மேலுறை, உள்ளிருக்கும் பொறிகள், இராக்கெட்டின் உச்சியிலுள்ள துணைக்கோள் ஆகியவை யாவும் சேர்ந்து 25% இருக்கும். ஆகவே, எரிபொருள் கலவை தீர்ந்தபின் எஞ்சி இருக்கும் பொருண்மை 25% தான் இருக்கும். இந்த அமைப்பினேக்கொண்ட இராக்கெட்டின் பொருண்மை விகிதம்

  • 一器—4 ஆகும். பொருண்மை விகிதத்தின்

அதிகரிப்பிற்கேற்ப இராக்கெட்டின் வேகமும் அதிகரிக்கும். மேலுறை எவ்வளவு இலேசாகவும், பொறியமைப்புகளே எவ்