பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

晏翰 தெசல்ே உலகச் செலவு வளவு சிறியவைகளாகவும் அமைத்தபோதிலும் பொருண்மை விகிதத்தை 7க்கு மேல் அதிகப்படுத்த முடியாது என்று கண் டுள்ளனர் இராக்கெட்டுப் பொறிஞர்கள். - மூன்றடுக்கு இராக்கெட்டு : துணைக்கோளே இயக்குவதற்கு வேண்டிய வேகத்தை அடைவதற்கு மூன்றடுக்கு இசாக்கெட்டி னேப் பயன்படுத்துகின்றனர். இராக்கெட்டு ஒன்ருக அமைக் தால் அதன் மேலுறையைத் துணைக்கோளினைத் தன்னிட மிருந்து கழற்றி விண்வெளியின் இயக்கும் வரையில் அதனை வீளுகச் சுமந்து செல்லவேண்டி நேரிடும். மூன்றடுக்கு இசாக்கேட்டில் அடிவிலுள்ள முதல் அடுக்கு முதலில் இயங்கத் தொடங்கும். அதிலுள்ள எரிபொருள் எரிந்து தீர்த்ததும் அது பயனற்றதாகிவிடுகின்றது. வீணுக ஒரு பளுவைச் சுமிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே அதனைக் கழற்தி தழுவவிட்டு விடலாம். இதனுல் எஞ்சியுள்ள இராக் கெட்டு அமைப்பின் எடை மிகவும் குறைந்துவிடுகின்றது. முதல் அடுக்கு இராக்கெட்டு கழலுவதற்கு முன்னர் அது மிகுந்த வேகத்தைப் பெறுகின்றது. இந்த வேகத்துடன் இசாக்கெட்டு அமைப்பின் எடையும் குறையும். இரண்டாவது அடுக்கு இசாக்கெட்டு இயங்கத் தொடங்கியதும் இசாக்கெட்டின் அமைப்பு பன்மடங்கு அதிக வேகத்தை அடைகின்றது. அதிலுள்ள எரிபொருள் கலவை முற்றிலும் தீர்ந்ததும் அதுவும் கழன்று தழுவி விழுந்து விடுகின்றது. இந்திலேயில் இராக்கெட்டு அமைப்பின் எடை மிகமிகக் குறைந்து விடுகின்றது. இரண்டாவது நிலே இராக்கெட்டு கழலும் இறுதி நிலையில் இராக்கெட்டு மேலும் அதிக வேகத்தைப் பெறுகின்றது. இந்த வேகமும் எடை குறைவும் சேர்ந்து மூன்ருவது திலே இராக்கெட்டினை மேலும் பன்மடங்கு வேகத்தை அடையச் செய்கின்றது. இறுதியாகவுள்ள மூன்ருவது அடுக்கு இராக்கெட்டுடன் சேர்ந்த அமைப்பின் எஞ்சிய பொருண்மை தொடக்கத்தில் இருந்த பொருண்மையைவிட மிகமிகக் குறைவாக இருக்கும்.