பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3: துணைக்கோளினை இயக்குதல் 4 இராக்கெட்டு அனுப்பப் பெற்ற இடத்திலிருந்து கிட்டத் தட்ட 980 கி. மீ. உயரம் சென்றதும், துணைக்கோளிற்கு மேலே அமைக்கப்பெற்றுள்ள கூம்பிய மூக்குப் பகுதி விடுபட்டுக் கீழே விழுத்துவிட்டது. இது காற்றினைத் துளைத்துக்கொண்டு செல்வதற்காக அமைக்கப் பெற்றதாகும். காற்றேவில்லாத அந்த உயரத்தில் மூக்கிற்கு வேலையில்லே. இதஞல், அது கழன்றுவிழச் செய்யப்பெற்றது. இதகுல், இசாக்கெட்டின் எடையும் குறைந்தது ; இதனுல், வேகமும் அதிகரித்தது. இவ்வாருக வேகத்தை வளர்க்க எல்லா முறைகளும் மேற்கொள்ளப் பெற்றன. இரண்டாவது அடுக்கு இராக்கெட்டிலுள்ள எரிபொருள் தீர்ந்ததும் அதுவும் கழன்று: நழுவி விழுத்துவிட்டது. இப்போது எஞ்சியிருப்பது மூன்ருவது அடுக்கு இராக் கெட்டும் அதன் துணியிலுள்ள சிறிய துணைக்கோளும் ஆகும். இரண்டாவது நிலை இராக்கெட்டு கழன்றுவிழும் நிலையில் மூன்ரு வதுநிலை இராக்கெட்டு ஒரு தானியங்கு அமைப்பால் இயக்கப் பெற்றது. அதுவும் தன்னுள் இருக்கும் ஒரு வழிகாட்டி அமைப் பால் தான்செல்லும் திசையில் சிறிதுசிறிதாக மாறிக்கொண்டே சென்றது. இறுதியாக அது பூமியின் கிடைமட்டமான திசை வில் செல்லுங்கால் அதன் வேகம் மணிக்கு 28,800 கி. மீட்ட ராக உயர்ந்தது. அச் சமயத்தில் இராக்கெட்டிலுள்ள வேருெரு. தானியங்கு அமைப்பால் தன் பிடியினின்றும் செயற்கைத். துணைக்கோளை விடுவித்து விண்வெளியில் தூக்கி எறிந்தது. மணிக்கு 28,800 கி. மீ. வீதம் சுற்றிவரும் செயற்கைத் துணைக்கோன் 95 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றிக் கொண்டு வருகின்றது. பூமி தனது அச்சில் சுழன்று கொண் டிருப்பதால், ஒவ்வொரு தடவையும் ஸ்பூத்ணிக் பூமியைச் சுற்றி வருங்கால் பூமியின் மேற்பரப்பில் புதிய புதிய பகுதியைக் கடந்து கொண்டே வந்தது. இங்கனம் அடுத்தடுத்து ஸ்பூத்ணிக் சுற்றி வந்த சுவடுகள் படத்தில் (படம் - 5) காட்டப் பெற்றுள்ளன. , '