பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一垒垒 தொலை உலகச் செலவு பூமியைச் சுற்றிவரும் துணைக்கோள் வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டுமாயின், அதன் வேகம் அதன் உயரத்திற்கு ஏற்ற சுற்றுவழி வேகமாக (Orbital velocity) அமைதல்வேண்டும். மற்றும், அது பூமிக்குக் கிடைமட்டமான திசையில் வீசப் பெறுதலும் வேண்டும். இந்த இரண்டு கூறுகளிலும் ஒரு சிறிது உடம் .ே பூமியின் திருப்பத்தால் ஒவ்வொரு தடவையும் ஸ்பூக்னிக் பூமியின் புதிய புதிய பகுதியைக் கடப்பதைக் காட்டுவது. மாறுதல் ஏற்பட்டாலும் துணைக்கோள் நீள்வட்டி வழியிலேயே (Eliiptical orbit) சுற்றி வந்து கொண்டிருக்கும் என்பதை முன்னரே விளக்கியுள்ளோம். மூன்ருவது அடுக்கு இராக்கெட்டி லுள்ள எரிபொருள் தீர்ந்ததும் அதுவும் சிலசமயம் நீள்வட்டச் சுற்று வழியில் சுற்றி வருவதுண்டு. ஆணுல், அதில் யாதொரு கருவியும் அமைக்கப்பெருததால் அதிலிருந்து எத்தவிதமான எடுகோள்களும் நமக்குக் கிடைக்க வழி இல்லை. சாதாரண டிாக மூன்ருவது அடுக்கு இராக்கெட்டும் கீழே விழுந்து விடுகின்றது. - இனறு விண்வெளியில் இயக்கப்பெறும் எல்லாத் துணைக் கோள்களும் மேற்கூறிய முறையிலேயே இயக்கப்பெறுகின்றன.