பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே அறிவியல் துணைக்கோள்கள் சில ஆண்டுகளாக அமெரிக்க இரஷ்யா நாடுகளால் விண்வெளிக்கு அடிக்கடி அனுப்பப்பெற்து மிகு வேகத்துடன் பூமியைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் செயற்கைத் துனேக் கோள்கள் கொண்டு செலுத்தும் புதிய வியத்தகு கண்டு பிடிப்புகளின் தன்மையைப்பற்றி நாம் இப்போது சிந்திக்கவும் இயலாது. இந்தச் செயற்கைத் துணைக்கோள்கள் யாவும் பேராற்றல் வாய்ந்த அறிவியல் கருவிகள். பூமி, அதன் வளிமண்டலம், கதிரவன், அண்டக் கதிர்கள், விண்வெளியில் சதா மழைபோல் பொழிந்து கொண்டுள்ள விண்கற்கள் முதலியவற்றின் தன்மைகளைப்பற்றித் தகவல்களைக் கொடுப் பதற்கேற்பத் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற அற்புத அமைப்புகளாகும் அவை. மனிதர்களே ஏற்றிச் செல்லும் இராக்கெட்டுகளும் மனிதர்களைக் கொண்ட விண்வெளி நிலையங்களும் அமைப்பதற்கு முன்னதாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களே அவை திரட்டித் தருகின்றன. 1955இல் அமெரிக்க அறிவியலறிஞர்கள் வேன்கார்டு துணைக்கோள்களைத் திட்டமிட்டு அமைக்கத் தொடங்கினர். அவை யாவும் அறிவியல் துட்பத்திறன் கொண்ட அற்புதப் படைப்புகளாகும். ஒவ்வொரு துணைக்கோளும் மின்னியல் மூளையையும், காந்த நினைவாற்றலேயும் வாளுெலிக் குரலையும் தன்னகத்தே கொண்டுள்ளது. துணைக்கோள்கள் கொண் டுள்ள அறிவியல் கருவிகள் யாவும் மிகமிகச் சிறியவை ; வியத்தகு நுட்பத்திறன் மிக்கவை. அக் கருவிகளுள் சில வற்றின் எடை ஒரு சில அவுன்சேயாகும். அவை யாவும் துட்பத்திறன் மிக்க மிகச் சிறிய கைக்கடிகாரம் போலவே மிகக் கவனத்துடன் அமைக்கப் பெற்றவையாகும்.