பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் துணைக்கோள்கள் 47 ஒவ்வொரு துணைக்கோளும் 50 செ. மீட்டர் குறுக்கு விட்டமுள்ள கோளமாகும். அக் கோளம் ஒரு அங்குல கனமுள்ள மெக்னிஷியத் தகடுகளால் அமைக்கப் பெற்றது. அதன் வெளிப்புறம் தங்க முலாம் பூசப்பெற்று அலுமினியப் பூச்சினையும் கொண்டிருப்பதால் அது கண்ணுடி போன்று பளபளப்பாகத் தோற்றமளிக்கும். அக் கூண்டில் வாளுெலிச் செய்திகளைப் பரப்புவதற்கு ஒவ்வொன்றும் 60 செ. மீட்டர். நீளம் கொண்ட நான்கு உணர்கொம்புகள் (Antemas) அமைக்கப் பெற்றுள்ளன. துணைக்கோள் இராக்கெட்டினுள் அடங்கியிருக்கும்பொழுது இக் கொம்புகள் மடங்கியிருக்கும்; அஃது இராக்கெட்டைவிட்டு வெளியேறுங்கால் இக் கொம்புகள் நீட்டிக் கொள்ளும். அறிவியல் துணைக் கருவிகளுடன் சேர்ந்து ஒரு துணைக்கோளின் எடை 9:72 கிலோ கிராம். எத்தகைய அளவீடுகள் தேவையோ அவற்றிற்கேற்பத் துணைக் கோள்கள் வெவ்வேறு வகைக் கருவிகளைக் கொண்டிருக்கும். இந்த அறிவியல் கருவிகள் யாவும் துணைக்கோளின் உட்புறத்தில் அசையாமல் இணைக்கப்பெற்ற ஓர் உலோக உருளையுள் அமைக்கப்பெறுகின்றன. உருளையின் அடிப் புறத்தில் பொருத்தப் பெற்றுள்ள பாதரச மின்கலங்கள் வாளுெலி அமைப்பிற்கும் பிற கருவிகட்கும் தேவையான மின்ளுற்றலே நல்கும். வானெலி அமைப்பு மிகச் சிறிதாக இருப்பதனால் அது மிேனிடிராக்' (Minitrack) என்று வழங்கப் பெறுகின்றது. அதன் எடை பதின் மூன்று அவுன்சேயாயினும். அது 6,400 கி. மீ. எல்லே வரையிலும் செய்திகளைப் பரப்பும் ஆற்றலைப் பெற். றுள்ளது. காந்த நினைவாற்றல் அமைப்பினைக் கொண்ட மின்னியல் மூளை அமைப்புக் கருவித் தொகுதிகள் விானுெலி பரப்பியுடன் (Radio transmitter) பொருத்தப் பெற்றுள்ளன. இவை யாவும் சேர்ந்து தொல்ை நிகழ்ச்சி அறிகருவி அமைப்பு (Telemetring system) & Asirpsor. Lsi Gapi sipisfusi, கருவிகளால் திரட்டப்பெறும் தகவல்கள் யாவும் காந்த நினைவாற்றல் அமைப்புகளில் சேகரம் செய்யப் பெறுகின்றன். அதன் பிறகு ஒவ்வொரு பதிவும் முறையே வாஞெலி