பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொலை உலகச் செலவு மற்ருெரு துணைக்கோளில் இணைக்கப்பெற்றுள்ள ஒளிமின்கலம் (Photo - electric ceil) என்ற மாயக் கண் பூமியின் மேற் பரப்பைத் துருவி ஆராய்கின்றது. அது முகிற் கூட்டங்கள் பரவியிருப்பதைப் பதிவுசெய்யும். வானிலை பற்றிய பல பிரச்சினைகட்குத் தீர்வுகாண இத் தகவல் அறிவியலறிஞர் கட்குத் துணை செய்யும். - பூமியிலிருந்து கொண்டு இந்த வேன்கார்டு துணைக்கோள் களின் சுவடுகளே வாளுெலி இசாடார், ஒளி-தொலைநோக்கிகள் மூலம் கண்டறிவதற்கு விரிவான திட்டங்கன் வகுக்கப் பெற். றுள்ளன. ஒவ்வொரு துணைக்கோளின் சரியான சுற்றுவழியை அறிவதால் மிக முக்கியமான தகவல் கிடைக்கின்றது. இதற் காகவே ஒரு வகையில் இராணுவப்படை அமைந்திருப்பது போல் வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலும் தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையிலும் பன்னிரண்டு வானுெவி நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன. இவை மினிடிராக் வானுெலிஏற்புநிலையங்கள்' என்று வழங்கப்பெறுகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் எட்டு உணர் கொம்புகள் இன இணையாக அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் துணையால் துணைக்கோளின் சரியான இருப்பினைத் தீர்மானிக்கமுடியும். இந் நிலையங்கள் இத் தகவலை வாஷிங்டனுக்கு வானொலி மூலம் அனுப்புகின்றன. அங்குத் துணைக்கோளின் சுற்றுவழி கணித்தறியப் பெறுகின்றது. இவற்றைத் தவிர மிக்க ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கிகள் (Telescopes) மூலம் துணைக்கோளின் சுற்று வழிகள் இன்னும் துல்லியமாக நீர்மாணிக்கப் பெறுகின்றன. இதற்காகவே இத்தகைய நிலையங்கள் பல கட்டப்பெற்றுள்ளன. அமெரிக் காவில் எல்லாப் பகுதிகளிலும் சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு துணைக்கோள்களின் சுற்றுவழிகளைக் காண்பதற்குப் பல பொழுதுபோக்கு வானதுல் வல்லுநர்கள் (Amateur astronomers) குழுக்களாக அமைந்து கொண்டு கவனித்து வருகின்றனர். இந்தத் திட்டம் செயற்படு திங்கள் கவனத்திட்டம்" (Operation Moonwatch) srsửrgi cutpIảiđẽủ Guglâsảrpgi.