பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. விண்வெளியைத் துருவி ஆராய்தல் தொலைவுலகப் பயணிகட்கு விண்வெளியைப் பற்றிய பல்வேறு தகவல்கள் மிகவும் இன்றியமையாதவை. செல்ல வேண்டிய இடங்களும் புதியவை ; செல்லும் வழிகளும் புதியவை. முதலில் செல்லும் வழியின் சூழ்திலேயைப்பற்றி அறிந்து கொள்ளப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றன. கடந்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரஷ்யாவும் விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைத் துணைக்கோள்களால் விண்வெளியைப் பற்றிய பல எடுகோள்கள் தமக்குக் கிடைத்துள்ளன. இரஷ்யா முதன்முதலாகத் தனது ஸ்பூத்ணிக்-1 ஐ விண்வெளிக்கு அனுப்பி வரலாற்றுப் புகழ் பெற்றது. இஃது அமெரிக்கர் களைத் திடுக்கிடச் செய்ததுடன் ஏமாற்றமும் அடையச் செய்தது. தாம் அனுப்புவதற்கு முன்னதாக இரஷ்யர்கள் துணைக்கோளை வெற்றிகரமாக இயக்கிவிட்டனரே என்ற அக்கம் அறிவுத் துறையில் முன்னுேடியாக இருந்த அமெரிக் கருக்கு ஏற்பட்டது இயல்பேயாகும். இத் திகழ்ச்சி அமெரிக் காவில் பரப்பரப்பை உண்டாக்கியது. அமெரிக்க காங்கிரஸ்வம் இதைப்பற்றி விவாதித்தது. அமெரிக்கச் செய்தித் தாள்களிலும் பல கருத்துகள் வெளியிடப்பெற்றன. முதல் முயற்சியாக அவர்கள் வேன்கார்டு இராக்கெட்டை அனுப்பினர். அஃது அனுப்பும் தளத்தினின்றும் சில மீட்டர் உயரம் எழும்பி வெடித்துவிட்டது. இரண்டாவது தடவையாக மற்ருெரு வேன்கார்டு இராக்கெட்டை அனுப்பத் திட்ட 1. அனுப்பியது 1887ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள். 3, 1957ஆம் ஆண்டு திசம்பர் 6ஆம் காள், .