பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్ క్షీ தொலை உலகச் செலவு மிட்டனர். வானிலே சரியாக இராததால் அனுப்புவதற்கும் பல நாட்கள் தாமதமாயிற்று. இந்நிலையில் இராக்கெட்டின் இரண்டாவது நிலையிலிருந்த எரிபொருள் தேக்கத்தில் (Fuel Tank) ஏற்பட்ட ஒழுக்கின் காரணமாக அது பழுது பார்ப்பதற்காக அகற்றப் பெற்றது. ஆயினும், குன்ருத முயற்சியுடன் எக்ஸ்புளோரர் என்ற முதற் செயற்கைத் துணைக்கோளை இயக்கிவிட்டது." அந்த நாள் தொட்டு அமெரிக்கா தொடர்ந்து பல திட்டங்களை வகுத்து நூற்றுக்கு மேற்பட்ட செயற்கைத் துணைக்கோள்களே இயக்கியுள்ளது. திங்கள் மண்டலத்தை ஆராய்வதற்காக அனுப்பப் பெற்ற இராக்கெட்டுகளும், உயிரினங்களேயும் மனிதனையும் ஏற்றிச் சென்ற செயற்கைத் துணைக்கோள்களும் விண்வெளியைப் பற்றிய எடுகோள்களைத் தத்தன. ஆயினும், இரஷ்யா தொடக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கென்றே மூன்றே ஸ்பூத்ணிக்குகளே இயக்கியுள்ளது. இந்த இரு நாடுகளும் இயக்கியுள்ள செயற்கைத் துணைக்கோள்களேப் பற்றியும் அவை தந்துள்ள அரிய எடுகோள்களைப் பற்றியும் ஈண்டுக் காண்போம். ஸ்பூக்னிக்-1. இஃது இயக்கப் பெற்றதைப்பற்றிக் கீழே விரிவாகக் கூறியுள்ளோம். இது நீள்வட்டச் சுற்றுவழியில் மணிக்கு 28, 800 கி. மீ. வீதம் பீப்பீப் என்ற ஒலியைப் பரப்பிக் கொண்டு பூமியைச் சுற்றி வந்தது. நீள்வட்டச் சுற்றுவழியின் அண்மைத் தொலைவு (Perigee) 227 கிலோ மீட்டர் ; சேய்மைத் தொலைவு (Apogee) 94' கிலோ மீட்டர் , அஃது ஒரு தடவை பூமியைச் சுற்றுவதற்கு 96 நிமிடங்கள் ஆயின. இத் துணைக்கோள் காற்றின் அடர்த்தி, அதன் வெப்பநிலை இவற்றின் எடுகோள்களைத் தந்ததுடன் அது சுற்றும் உயரத்திலும் காந்த மண்டலம் இருப்பதை அறிவித்தது. அது சுற்றிவந்த தொலைவில் சிறிதளவு காற்றும் இருந்தது எனக் கொள்ளவேண்டும். இந்த .ே 1958ஆம் ஆண்டு சனவரி 19ஆம் நாள், 4. 1958ஆம் ஆண்டு சனவரி 31ஆம் நாள்.