பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் 菇器 இலேசான காற்றின் உராய்விளுல் அதன் வேகம் வரவரக் குறைந்து கொண்டே வந்து, பூமியைச் சுற்றிப் பறந்து கொண்டே அதனை நெருங்கியது. மூன்று மாத இறுதியில் அடர்த்தி மிகுந்த காற்றின் வழியாக உராய்ந்து வருங்கால் வெப்பம் அதிகரித்து உருகி எரித்து சாம்பராகிவிட்டது. ஸ்பூத்ணிக்-2: முதல் ஸ்பூத்ணிக்கை இயக்கிய ஒரு மாத காலத்தில் இரஷ்யா இதனையும் இயக்கியது. இது மேல் வளிமண்டலத்தை ஆராயும் நோக்கத்துடன் அதிக உயரத்தில் செலுத்தப் பெற்றது. அது சுற்றி வந்த நீள்வட்ட வழியின் அண்மைத் தொல்வு 228 கிலோ மீட்டர் ; சேய்மைத் தொலைவு 1,670 கிலோ மீட்டர். அது பூமியை ஒரு முழுச் சுற்று சுற்றி வருவதற்கு 104 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. கதிரவனிட மிருந்து வரும் புறஊதாக் கதிர்கள், புதிர்க்கதிர்கள் (X-rays), விண்மீன் மண்டலங்களிலிருந்து வரும் அண்டக் கதிர்கள் இவற்றை ஆராய்வதற்கான பல நுட்பமான கருவிகள் அத் துணைக்கோளில் அமைக்கப்பெற்றிருந்தன. கூம்பு வடிவங் கொண்ட அத் துணைக்கோளின் எடை சுமார் 507:28 கி. கிராம் (அரை டன் எடைக்கு மேற்பட்டது இது). ஆகும். ஐந்து மாதங்கள் வரையில் கதிர்வீச்சு, வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற பல்வேறு எடுகோள்களே அறிவித்துக் கொண்டே இருத்து இறுதியில் பூமியை நெருங்கி எரிந்து அழிந்துவிட்டது. எக்ஸ்புளோர்-1: இது அமெரிக்கப் பாதுகாவல் துறை வல்லுநர்களால் இயக்கப் பெற்றது. இது 15 செ. மீட்டர் குறுக்களவும். 200 செ. மீ. நீளமும் உள்ள உருளை வடிவங் கொண்ட ஒர் அமைப்பாகும். இதில் அண்டக் கதிர்களேயும், கதிரவனின் வெப்பநிலையையும், விண்கற்களேயும் கணிப்பதற் கான கருவிகள் அமைக்கப் பெற்றிருந்தன. இதன் 5. இது 1957ஆம் ஆண்டு வம்பர் மாதம் 8ஆம் சேள் இயக்கம் பெற்றது. - 8. 1958ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 81ஆம் நாள்.