பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் §§ உண்டாக்குகின்றன. இதல்ை புவிக்காந்த மண்டலமும் மாறுதலுக்கு உட்படுகின்றது. மின்துகள்கள் பூமியின் துருவப் பகுதிகளில் மட்டிலுமே திரளுகின்றன. புவிக்காந்த மண்டலம்தான் பூமியைச் சூழ்ந்துள்ள மின்துகள்களைத் தன் ஆட்சிக்குள் அடக்கிக் கொண்டுள்ளது. மின்துகள்கள் கட்டுண்டு நிரம்பியுள்ள மண்டலமே வான் அல்லென் கதிர் வீச்சு வளே சூழல் ஆகும் ; இதைத்தான் எக்ஸ்புளோசர் கண்டறிந்தது. இதிலுள்ள மின் துகள்கள்தாம் மேல்வளி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன என்றும், வானிலே மாறுபாடுகளுக்கும் இவையே காரணமாக உள்ளன என்றும் சில அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும், காத்த மண்டலத்தில் அடர்ந்து காணப்பெறும் புரோட்டான், எலக்ட்ரான் போன்ற மின்துகள்கள் எங்கிருந்து போந்தன என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கதிரவ ஒளிக் குமுறல் திகழுங்கால் கதிரவன் இத் துகள்களை வீசுகின்றது என்பது ஒரு சாராரின் கொள்கை. மேல்வளி மண்டலத்திலுள்ள நியூட்ரான்கள் அழிவதாலும், விண்மீன் மண்டலத்தினின்று வரும் அண்டக் கதிர்கள் மேல்வளி மண்டலத்தைத் தாக்குவதகுலும் உண்டாகும் புரோட்டான் களும் எலக்ட்ரான்களும் காந்த மண்டலத்தில் சிக்கிக்கொள்ளு. கின்றன என்பது மற்ருெரு சாராரின் கொள்கையாகும். இனி மேற்கொள்ளப்பெறும் ஆராய்ச்சிகளே எது உண்மை என்பதை அறுதிவிடல் வேண்டும். நமது நற்காலத்தினுல் இத் துகள் கண் பூமியை வந்தடையவில்லே. எனினும், விண்வெளிப் பயணிகட்கு இவை மிகவும் கேடு பயக்கக் கூடியவை. செயற்கைத் துணைக்கோளில் அமைக்கப் பெதும் கதிரவ ஒளி மின்கலங்கள், தை-வானுெலி அமைப்புகள் (Transistor qேuipments) ஆகியவற்றின் வாழ்நாள்களே இக் கதிர்வீச்சு குறைத்துவிடுகின்றது. காந்த மண்டல ஆராய்ச்சிக்கென்று இரஷ்யா இயக்கி யுள்ள காஸ்மாஸ்-3, காஸ்விஸ்-5 என்ற இரு ஸ்பூக்னிக்குகளும்" 10. இவை முறையே 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 24 லிலும், மே 28 லும் இயக்கப் பெற்றன. -