பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் §§ ஏற்றிச் செல்லப் பெற்று விண்வெளிக்குச் சென்றதும் காற்று நிரப்பப் பெற்று உருண்டை வடிவம் பெற்றது. அதன் நிறை ஏறக்குறைய 78 கி. கிராம்கள். அதன் அண்மைத் தொலைவு 1,512 கி. மீட்டர்கள்; சேய்மைத் தொலைவு 1,680 கி.மீட்டர்கள். இது பூமியை ஒருமுறை சுற்ற 118 நிமிடங்கள் ஆகின்றன. வானெலி அலைகளாக அனுப்பப் பெறும் செய்திகள் இந்தப் பலூனில் பட்டுத் திருப்பம் அடைகின்றன. திருப்பம் அடையும் அலைகள் வேறு நாட்டினால் ஏற்கப் பெறுகின்றன. தொலைக் காட்சி, தொலைபேசி போன்ற தொடர்புகட்கும் இது சிறப்பாகப் பயன்படும். அடுத்து அமெரிக்கா அனுப்பிய துணைக்கோள்" ட்ெல்ஸ்டார் (Telstar) என்பது. இது 86.3 செ. மீ. குறுக்கள வுள்ள ஒரு கோள வடிவுடையது ; இதன் நிறை 86.2 கி. கிராம்கள். இது பூமியை மணிக்கு 25,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றது . ஒரு தடவை சுற்றுவதற்கு 2 மணிநேரம் ஆகின்றது. பல நாடுகளும் தொலைக்காட்சித் தொடர்பு கொள்வதற்காக இஃது இயக்கப் பெற்றுள்ளது. இதில் 36,000 கதிரவ மின்கலங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் உண்டாகும் மின்னுற்றல் 19 மின்கல அடுக்குகளை மின்னூட்டம் செய்வதற்குப் பயன்படுகின்றது, இதில் தொலைக் காட்சி, தொலைபேசிக் கருவிகள் அமைக்கப் பெற்றுள்ளன. தவிர, அதில் அமைக்கப் பெற்றுள்ள 15,000 பகுதிகளைக் கொண்ட வேறு கருவிகள் 115 வகை எடுகோள்களைப் பதிவு செய்கின்றன. பூமியினின்றும் அனுப்பப் பெறும் செய்திகளை இத் துணைக்கோள் கோடிக்கணக்கான அளவு பெருக்கவல்லது. பூமியின் ஓரிடத்திலிருந்து அனுப்பப் பெறும் பேச்சுகளையும், தொலைக்காட்சி முறையில் அனுப்பப் பெறும் பேச்சுகளையும் இத் துணைக்கோள் ஏற்று அவற்றைப் பன்மடங்கு பெருக்கிப் பூமிக்கு அனுப்பி வைக்கின்றது. தேவைப் படும் இடங்களில் அவற்றை ஏற்கலாம். தவிர, இத் துணைக் கோள் திரட்டும் பிற எடுகோள்களைப் பூமியிலிருந்து கட்டளை 20. 1962ஆம் ஆண்டு சூலை 10ஆம் நாள். தொ. உ. செ.-5