பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் 67 இயக்கப்பெற்ற** இது பூமியை வட்டமாகச் சுற்றி வருகின்றது. இதிலுள்ள 1860 கதிரவ மின்கலங்கள் 27 வாட் மின்ளுற்றலைத் தருகின்றன. இவ்வாற்றல் இத் துணைக்கோளிலுள்ள கருவிகள் இயங்கப் பயன்படுகின்றது. இத் துணைக்கோள் 13 முக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அவை: கதிரவனிட மிருந்து வரும் புதிர்க்கதிர்களே நிறமால்ை மானியைக் (Spectrometer, கொண்டு பகுத்து ஆராய்தல், கதிரவ ஒளிக் குமுறல் காரணமாக புதிர்க்கதிர்களின் செறிவு உயரும் அளவை ஆராய்தல், செறிவு உயருங்கால் ஏற்படும் நிறமாலை வேறுபாட்டை ஆராய்தல், கதிரவ ஒளிவீசும் ஆற்றலுடன் சேர்ந்து வெளியேறும் துகள்களின் வேகத்தை ஆராய்தல், கதிரவனில் கணந்தோறும் எத்தனே டன் நீரிய அணுக்கள் பரிதிய அணுக்களாக மாறுகின்றன என்பதை ஆராய்தல், புறஊதாக் கதிர்களே ஆராய்தல், ல்வேறு வகையில் காமாக் கதிர்களே ஆராய்தல், அண்டக் கதிர்கள் காற்றினத் தாக்குவ தால் உண்டாகும் நியூட்ரான்களே ஆராய்தல், வான் அல்லென் வன சூழலிலுள்ள புரோட்டான் எலக்ட்ரான்களை ஆராய்தல், த் துணைக்கோளில் அமைக்கப்பெற்றுள்ள பல்வேறு பரப்புகள் (Surfaces) எந்த அளவுக்கு வெப்பம் அடைகின்றன என்பதை ஆராய்தல் ஆகியவையாகும். இந்த ஆராய்ச்சிகள் யாவும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேயுள்ளன. மேலே கூறப்பெற்றுள்ள தகவல்கள் யாவும் திங்கள் மண்டலப் பயணிகட்குப் பெரிதும் பயன்படும். 34. 1988ஆம் ஆண்டு மார்ச்சு ?ஆம் நாள்.