பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

به سمت * 喀 به سبب س، ث 8. திங்கள் மண்டல ஆராய்ச்சி

பறக்கச் சிறகிருந்தால் * வெண்ணிலாவே-உன்றன்

பக்கம் வந்து சேருவேனே வெண்ணி லாவே' என்பது மனிதன் காணும் கனவினைக் குறிப்பிடும் கவிஞனின் குரல். பறக்கச் சிறகில்லையே என்றிருந்த ஏக்கம் வானவூர்தி கண்டறியப் பெற்றதால் ஒழிந்தது. இந்த ஊர்தியில் பறந்து சென்று மனிதன் பனிக்கடல் சூழ்ந்த வடதுருவத்தைக் கண்டு விட்டான் ; பனிக் கண்டத்தின் நடுவிலுள்ள தென் துருவத்தையும் பார்த்துவிட்டான். இராக்கெட்டுகள் கண் டறியப்பெற்ற பிறகு இன்று விண்வெளியையும் துருவத். தொடங்கிவிட்டான். பல செயற்கைத் துணைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிப் பல்வேறு தகவல்களே அறிந்து, கொண்டுமுள்ளான். மேலும் மேலும் உயரச் சென்று திங்கள் மண்டலத்தையும் ஏனைய துணைக்கோள்களையும். எட்டிப் பிடித்துவிட முயன்று வருகின்ருன். திங்கள் மண்டலத்தை ஆராய்வதற்காக இரஷ்யாவும் அமெரிக்காவும் பல விண்வெளிக் கலங்களை இயக்கியுள்ளன. அவற்றுள் சில திங்களின் ஈர்ப்புவிசையின் கட்டுக்கடங்காது வெளியேறிக் கதிரவனின் கோள்களாகச் சுற்றி வந்து கொண்டுள்ளன. இங்ங்னம் இரு நாடுகளும் திங்கள் மண்டலத்தை ஆராயும் நோக்கத்துடன் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப்பற்றி ஈண்டுக் காண்போம். 1. கவிமணி : மலரும் மாலையும் - வெண்ணிலா - 15.