பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள் மண்டல ஆராய்ச்சி 69 அமெரிக்கா திங்கள் மண்டலத்தை ஆராயும் நோக்கத் துடன் பயணியர் (Pioneer) என்ற திட்டத்தில் பல துணைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன. முதலில் அனுப்பப்பெற்ற' பயணியர். 38.5 கி. கிராம்கள் எடையைக் கொண்டது. திங்களின் மறுபகுதியைப் படம் எடுப்பதற்கான ஒளிப்படக் கருவி இதில் அமைக்கப் பெற்றிருந்தது. பயனியர்-1 மணிக்கு 40,000 கி. மீ. வேகத்தை அடைந்து நீள்வட்டச் சுற்றுவழியில் இயங்கும்பொழுது திங்களுக்கு 80,000 கி. மீ. அண்மையில் செல்லுவதற்கேற்ற திட்டம் வகுக்கப் பெற்றிருந்தது. ஆகுல், அஃது எப்படியோ வழி விலகி ஒருநாளில் 1,28,000 கி. மீ. உயரம் சென்று, பிறகு வளிமண்டலத்தால் கவரப்பெற்று பூமியை நோக்கி மீண்டு வருங்கால் எரிந்து போயிற்து. அடுத்து, பயணியர்-3 என்ற துணைக்கோள் இயக்கப்பெற்றது. தங்கத் தகட்டால் வேயப் பெற்ற இத் துணைக்கோள் 5.9 கி. கிராம்கள் எடையை உடையது. இது 101,728 கி. மீ. உயரம் வரை சென்று வான் அல்லென் வளை சூழலுக்குமேல் இரண்டாவது கதிர்வீச்சு மண்டலம் இருப்பதாக அறிவித்தது. ஆயினும், இது திங்கள் மண்டலத்தை அணுகிப் போகவில்க்ல. இரஷ்யா திங்களே ஆராயும் முயற்சியில் மூன்று துணைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. முதலில் அனுப்பப்பெற்ற" லூனிக்-1 ஒரு டன் நிறையுடைய உருண்டை வடிவங்கொண்டது. திங்களின் காந்தப் புலத்தை அறியவும், அண்டக் கதிர்கள், புதிர்க்கதிர்கள், காமா-கதிர்கள் ஆகியவற்றைக் கணக்கிடவும் கதிரவனின் கதிர் வீச்சை அளக்கவும் இதில் கருவிகள் அமைக்கப்பெற்றிருந்தன. இறுதி அடுக்கு இராக்கெட்டிலிருந்து இது விடுபட்டதும் அதிபரவளைவு (Hyperbola) வழியில் செல்லத் தொடங்கியது; ஏறக்குறைய 36 மணிநேரத்தில் திங்களின் சூழலே அடைந்தது. 3. 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள். 8. 1958ஆம் ஆண்டு திசம்பர் ஆேம் நாள். 4. 1959ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள்.