பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள் மண்டல ஆராய்ச்சி 73 இந்தச் சுற்றுவழி திங்களைச் சுற்றியும் சென்றது. திங்களின் மறுபுறத்தைப் படம் பிடிப்பதற்கும் வான்மதிச் செலவினை மனிதன் மேற்கொள்ளுங்கால் நேரிடும் சிக்கல்கட்குத் தீர்வு காண்பதற்கும் இஃது இயக்கப் பெற்றது. இது வலுவான பல அடுக்கு இராக்கேட்டின் இறுதி அடுக்கு ஆகும். இதன் படம் 11. லுானிக் - 8 திங்களின் மறுபுறத்தையும் படம் எடுத்தலேக் காட்டுவது. நிறை 7 டன் ; இதில் அமைக்கப் பெற்றிருந்த கருவிகளின் நிறை 4 டன் ஆகும். திங்களின் காந்தப் புலனையும், புவிக்காந்தப் புலனையும் அளப்பதற்காகக் காந்த மாணிகள் (Magnetometers) இதில் பொருத்தப் பெற்றிருந்தன. இவற்றைத் தவிர, ஒளிப்படக் கருவிகளும், அண்டக் கதிர் களின் கணிப்பான்களும் இதில் அமைக்கப் பெற்றிருந்தன. இராக்கெட்டை இயக்கும் சாதனங்களும் இராக்கெட்டில்