பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தொலை உலகச் செலவு அமைக்கப் பெற்றிருந்த கருவித் தொகுதிகளும் தரையி: லுள்ள தொ ைஇயக்கிகளுக்கு (Remote control) உட்பட்டு இயங்கின. - லூனிக்-3 என்ற இராக்கெட்டு திட்டமிடப்பெற்ற சுற்றுவழியில் திங்களை நோக்கிச் சென்றது. அதிலுள்ள கருவியமைப்புகள் யாவும் செம்மையாக இயங்கின. இறுதி அடுக்கு இராக்கெட்டு திங்களின் சுற்றுப் புறத்தை அடைந்த பொழுது திங்களால் ஈர்க்கப் பெற்று விரிந்த நீள்வட்டச் சுற்றுவழியில் இயங்கத் தொடங்கியது. அது சேய்கைத் தொலேவை அடைந்தபொழுது திங்களுக்குப் பின்புறம் 96,000 கி. மீ. தொலைவில் இருந்தது. அஃது அண்மைத் தொலேவை எட்டும்.ோழுது பூமிக்கு மறுபுறம் 40,000 கி. மீ. தொலைவுவரை சென்றது. இம் முறையில் திங்களையும் பூமியையும் சேர்த்து ஒரே நீள்வட்டச் சுற்றுவழியில் சுற்றிக் கொண்டு இயங்குவதைப் படத்தில் (படம் - 11) கண்டு தெளிக. இங்ங்ணம் ஒருமுறை சுற்றி வருவதற்கு 15 நாட்கள் ஆயின. இந்த இராக்கெட்டு திங்களுக்குப் பின்புறம் அதன் அருகில் சென்றபொழுது அதிலிருந்த ஒளிப்படக் கருவி தானியங்கு அமைப்பினுல் திறந்து திங்களின் பின்புறத்தைத் தானகவே படங்களைப் பிடித்து அவற்றை ஒரு காந்த நாடாவில் பதித்துக் கொண்டது. சில நாட்களுக்குப் பிறகு லூனிக்-3 பூமியின் அருகில் வந்தபொழுது, பூமியினின்றும் கட்டளை பிறந்ததும், காந்த நாடாவில் பதிவான படத்தின் ஒளிப் பகுதிகள் வானுெலி அலைகளாக மாற்றப் பெற்று பூமிக்கு அனுப்பப்பெற்றன. அவற்றை ஏற்று ஒளியாக மாற்றித் திரையில் இட்டனர். இப் படங்கள் தொலைக்காட்சிப் படங்களைப் போன்றவை. இப் பெரிய அருஞ்செயல் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மேற்கூறியவாறு மூன்று லூனிக்குகளும் 1959இல் திங்களைப்பற்றிய ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக முற்றுப்பெறச் செய்ததால் அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் இந்த ஆண்டினை இரஷ்ய லூனிக்குகளின் ஆண்டு' எனப் பெயரிட்டனர். -