பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள் மண்டல ஆராய்ச்சி 75。 1966ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஓர் ஆண்டாகக் கருதப்பெறும். ஏனெனில் இந்த ஆண்டில்தான் முதலாவதாக, முதன்மையாகத் திங்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கப் பெற்றது. இந்த ஆண்டில் இரஷ்ய அறிவியலறிஞர்களும் பொறிஞர்களும் முதல் தடவை யாக மிகவும் சிக்கலான இரண்டு அறிவியல் - தொழில்நுட்பப் பிரச்சினேகட்குத் தீர்வு கண்டனர். ஒன்று : லுனு 9 என்ற தானியங்கி விண்வெளிக் கலத்தைத் திங்களின் தரையில் மெதுவாக இறங்கச் செய்தனர். இது திங்களின் நிலப்பரப்பின் நுண் அமைப்பை அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது. இரண்டு: லுனு - 19 என்ற தானியங்கி விண்வெளிக்கலம் திங்களின் துணைக்கோளாக இயங்குமாறு செய்யப் பெற்றது. திங்களேச் சுற்றி வருவதற்கு அனுப்பப் பெற்ற முதல் துணைக்கோளில் பொருத்தப் பெற்றிருந்த பல்வேறு கருவிகள் திங்களின் அருகிலுள்ள விண்வெளி பெளதிகத்தைக் குறித்து முறையான ஆராய்ச்சியினைத் தொடங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. அறிவியல் துறையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடன்றி எதிர்காலத்தில் மனிதன் விண்வெளிக் கலத்தில் திங்களுக்குச் செல்வதற்கான நிலைமைகளைக் கண்டறிவதற்கும் மிகுந்த நடைமுறை முக்கியத்துவம் உடையதாகும், லுனு 9 ஐத்தொடர்ந்து மற்ருெரு சோவியத் கலனும், அமெரிக்க சர்வேயர் என்ற விண்வெளி இராக்கெட்டும் திங்களில் ‘டியல்-கடில் என வழங்கப் பெறும் பகுதியில் மேன்மையாகத் தரையிலிறங்கின. ஏற்கெனவே, பல இரஷ்ய அமெரிக்கத் துணைக்கோள்கள் திங்களுக்கு அருகிலுள்ள சுற்றுவழிகளில் திங்களை வட்டமிட்டு வருகின்றன. இந்தத் துணைக்கோள்கள் திங்களின் நிலப்பரப்பைப் பற்றி விளக்கமான ஒளிப்படங்களைத் துலக்கிப் பூமிக்கு அனுப்பியுள்ளன. மேலும், முதன்முதலாகத் திங்களைச் சுற்றி வட்டமிடுவதற்கு இரஷ்யர்களால் அனுப்பப் பெற்ற லுனு.10" குறிப்பிடத் தக்க அறிவியல் ஆராய்ச்சிகளைச் .ே இஃது 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் காள் இயக்கம் பெற்றது. -