பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀6 தொலை உலகச் செலவு செய்து முடித்துள்ளது. திங்கள் பரப்பின் பெளதிக, வேதியியல் இயல்புகளைத் தெளிவுபடுத்தும் பலவகையான கதிர் வீச்சு களையும் நேரில் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த எடுகோள்கள் திங்களின் நிலப்பரப்பில் உள்ள பாறைகளின் இயல்பை அறுதியிடுவதற்குத் துணைபுரிந்தது. திங்களிலுள்ள பள்ளங்கள் - கடல்கள்' என வழங்கப் பெறுபவை - பூமி -யிலுள்ள எரிமலைப் பாறை வகையைச் சேர்ந்த பாறைகளால் ஆக்கப் பெற்றுள்ளவை என்பது மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது. மேலும் இத் துணைக்கோள் திங்களின் ஈர்ப்புப் புலனையும் பரிசீலனை செய்து தகவல்களை அனுப்பியுள்ளன. திங்களின் நிலப்பரப்பில் இறங்கிய விண்வெளிக் கலங்கள் அஞ்சல் செய்த ஒளிப்படங்கள் திங்களின் நிலப்பரப்பைக் காண் பதற்கு வாய்ப்பளித்தன. லுனு.9உம் லுனு-13உம் திங்களின் நிலப்பரப்பின் கதிரியக்கத்தை அளந்து காட்டியுள்ளன. அண்டத்துகள்களின் ஓட்டமும், "கதிரவக் காற்றும் திங்களின் நிலப்பரப்பை நிரந்தரமாக ஒளிரச் செய்துள்ளன. திங்களின் நிலப்பரப்பில் நிலவும் கதிரியக்கத்தின் உறைப்பு விண்வெளி வீரர்கட்கு விபத்தினை விளைவிக்கும் அளவுக்கு இல்லை என்பது தெரியலாயிற்று. முதன் முதலாக திங்களின் நிலப்பரப்பின் இயல்பு லூனு-13ஐக் கொண்டு சோதிக்கப் பெற்றது. இக் கலத்தில் பொருந்தப் பெற்றிருந்த பொறிகள் திங்கள் மண்ணின் பெளதிக பொறியியக்கப் பண்புகள் பற்றிய தகவல்க ள் பெறுவதைச் சாத்தியமாக்கின. திங்களின் நிலப்பரப்பின் மேலடுக்கின் செறிவு தண்ணிரின் செறிவைவிடக் குறைவு என்பது மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது. ஆ த னு ை- ய கட்டமைப்பைப் பொறுத்தமட்டிலும் "திங்கள் மண்டலக்கல்' பூமி விலுள்ள எரிமலைச் சாம்பலான பாறையையும் எரிமலைக்குழம்புப் பாறையையும் ஒத்துள்ளது என்பதாகக் கருத இடந்தரு கின்றது. திண்மை குறைவாக இருப்பினும், நுண் துளைகளை :புடையதாக இருப்பின், அந்நிலப்பரப்பு அதனுடைய பொறி யியக்கப் பண்புகளைப் பொறுத்தமட்டிலும் பூமியிலுள்ள