பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரையினைக் கீழே காண்க "தத்தம் கூறுபாட்டினால் வாயில்கள் கூறும் கிளவி வெளிப்படக் கூறுதல் கேடின்றி உரிய என்றவாறு. தம்தம் கூறாவது அவரவர் சொல்லத்தகும் கூறுபாடு. எனவே வாயில்களல்லாத தலைமகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் என்றவாறு, வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லும் உள்ளுறை சொல்லுகின்றாராதலின், அவ்வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. இவர் வெளிப்படக் கூறாமல் மறைத்துக் கூறினால் குற்றமென்னை எனின், இவர் குற்றவேல் முறைமையராதலானும் கேட்போர் பெரியோராதலானும் வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமையாலும், அவ்வாறு கூறினால் இவர் கூற்றிற்குப் பயனின்மையானும் வெளிப்படவே கூறும் என்ற" என்பர். வாயில்கள் தலைவனிடம் கூறுவன மேற்கூறிய வாயில்கள் தலைவனிடம் சென்று தலை மகளைப் பற்றிப் பேசினால் என்ன பேச வேண்டும் என்பதை, கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் முகம்புகல் முறைமையிற் கிழவோர்க் குரைத்தல் அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய (தொல். பொருளதிகாரம் - 150) என்ற நூற்பாவால் உணரலாம். வாயில்களை இருவகையாகப் பிரிக்கலாம். புறத்தேயிருந்து செயல் செய்பவரும், அகத்தே புகுந்து செயல் செய்பவருமென, இவ்விருவருள் அகம் புகுந்து தலைவன் தலைவியரிடத்தே செயல் செய்யும் வாயில்களாக உள்ளவர்கள், தலைவனுடைய முகம் விரும்பும் வகையில், தலைவியைப் பற்றிப் பேச்சு நிகழ்த்துவதானால், அவருடைய கற்பொழுக்கம், காமம் பண்பு, பகுதிப்பட்ட நல்லொழுக்கம், மென்மையான இயல்பு வாய்ந்த பொறுமை, மன அடக்கம், தகுதியாக விருந்தினரை வரவேற்று உபசரித்தல், உறவினரைப் பாதுகாத்தல் முதலிய நல்ல இயல்புகளையே எடுத்துக் கூறிப்பேசவேண்டும். அது