பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 போலவே அவ்வாயில்கள் தலைவியிடம் சென்று தலை மகனைப் பற்றிப் பேச்சு நிகழ்த்தினால் தலைமகனுடைய நல்ல பண்புகளை எடுத்துக் கூறிப் பேச வேண்டுமே தவிர அவனைப் பற்றிய கொடுமைச் சொற்களைப் பேசுதல் கூடாது என்பதனை, மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை (தொல், பொருளதிகாரம் - 163) என்னும் நூற்பா உணர்த்துகிறது. வாயில்கள் மகிழ்ச்சிப் பொருள் மேற்கூறிய எல்லா வாயில்களும், தலைவன் தலைவி என்னும் இருவரிடத்தும் மகிழ்ச்சிப் பொருட்டு ஏதுவாக இருத்தல் வேண்டுமேயன்றி, மகிழ்ச்சி இல் பொருட்டு ஏதுவாயிருத்தல் கூடாது என்பதனை, எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப (தொல். பொருளதிகாரம் - 176) என்னும் நூற்பாவால் உணரலாம். மேற்கூறிய வாயில்கள் தலைவன் தலைவியரிடத்தேயன்றித் தமக்குள் பேசிக் கொள்ளுமிடத்தேயும் தலைவியின் உயர்ந்த பண்புகளையும் தலைமகனுடைய சிறந்த பண்புகளையும் மேற்கூறியவாறு பேசிக் கொள்ளவேண்டுமேயன்றித் தலைவன் தலைவியைப் பற்றிப் புறம் பழித்துக் கூறாதவராயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி, வாயி லுசாவே தம்முள் உரிய (தொல், செய்யுளியல் 19) என்ற நூற்பாவால் உணரலாம். 1. தம் உள. ஆதல் - தம் உரைக்கண் உளதாக்கிக் கூறல் 2. இளம்பூரணர் "கற்புங்காமமும்" (தொல். பொரு ளதிகாரம் - 150) என்பதன் உரையுள், "செய்யுளியலுள் "வாயிலுசாவே தம்முளுரிய" என்பதனால், தலைவியின் பண்புகளையெல்லாம் தலைமகனுக்கு உரைத்தலே யன்றித் தம்முள் தாம் கூறுதலும் உரியர்.