பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தொகுப்புரை எனவே ஐந்திணைக் காமத்தில் வரும் பணியாட் களெல்லாம் (வாயில்களெல்லாம்) தலைவனிடத்தே பேசும் போது தலைவியின் உயர்ந்த மாண்புகளையே பேசியும் தலைவனிடத்துப் பேசும்போதும் தலைவனின் சிறந்த மாண்புகளையே பேசியும், தமக்குள் பேசுமிடத்தும் இருவர் கொடுமைளைக் கூறாமல் இருவர்தம் பண்புகளையே பேசல் வேண்டும் என்பதும் எல்லா வாயில்களும் தலைவன் தலைவியரின் மகிழ்ச்சிக்கே ஏதுவாயிருந்து தம் சொற்களை வெளிப்படையாகப் பொருளுணரும் சொற்களாகவே கூறல் வேண்டும் என்பதையும் தொல்காப்பியர் உணர்த்துகிறார். பிசிராந்தையாரும் பணியாட்களை யான் கண்டனையர்' என்று குறிப்பிடுகின்றார். ஐந்திணைக் காமமல்லாத காம ஒழுக்கத்தில் அத் தலைவன் தலைவியர்க்கு வரும் ஏவலரெல்லாம் பெரும் பாலும் தலைவனிடத்திலே சென்று தலைவியைப் பழித்துக் கூறலும் தலைவியிடத்தே சென்று தலைவனைப் பழித்துக் கூறலும் உடையராய்த் தமக்குள் பேசிக் கொள்ளும் பொழுதும் இருவர்தம் பழிப்புரையினையே பேசிக் கொள்பவராயிருப்பர். ஒரு தகுதியற்ற மந்தரை என்னும் தோழி, கைகேயி என்னும் தலைவியிடம் சென்று தலைவனைப் பழித்துக் கூறிச் செய்த சூழ்ச்சி ஒன்றே, எத்தனையோ பேருக்கு அளவற்றை துன்பத்தைக் கொடுத்தது என்பதை இராமாயணக் கதையால் உணர்கிறோம்.