பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 உலகப் பொருள் o எல்லாவற்றிற்கும் காமமே முதல் தோற்றுவாய் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொடக்கத்தே அதன் பழைய உரையாசிரியராகிய இளம்பூரணர் சொல்' என்பதை விளக்குமிடத்தே, "சொல் என்பது எழுத்தோடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை" என்றனர். அவரே பொரு ளதிகாரத் தொடக்கத்தே பொருள் என்பதை விளக்கு மிடத்தே, பொருள் என்பது யாதோவெனின், மேற்சொல்லப் பட்டசொல்லால் உணரப்படுவது என்று கூறி, அப்பொருள் முதல், கரு, உரிப்பொருள் என மூவகைப்படும் என்பர். முதற்பொருளாவது நிலமும் காலமும் என இரு வகைப்படும். நிலன் எனவே நிலத்திற்குக் காரணமாகிய நீரும் நீர்க்குக் காரணமாகிய தீயும் தீக்குக் காரணமாகிய காற்றும் காற்றிற்குக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும். சாலமாவது மாத்திரை முதலாக நாழிகை யாமம் பொழுது நாள் பக்கம் திங்கள் இருது அயவம் யாண்டு உகம் எனப் பலவகைப்படும். கருப்பொருளாவது இடத்திலும் காலத்திலும்தோன்றும் பொருள். அது தேவர் மக்கள் விலங்கு முதலியனவும் உணவு செய்தி முதலாயினவும் யாழ் பறை முதலாயினவும் இன்னவான பிறவும் ஆகிப் பலவகைப்படும். உரிப்பொருளாவது மக்கட்கு உரிய பொருள். அஃது அகம் புறம் என இருவகைப்படும். அகமாவது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனவும் கைக்கிளை பெருந்திணை எனவும் இருவகைப்படும். புறமாவது நிரை கோடற்பகுதியும் பகைவயிற் சேறலும் எயில்வளைத்தலும் இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும் புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும்.