பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அஃதற்றாக அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின் அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். அஃதற்றாக இது பொருளதிகாரமாயின் உலகத்துப் பொருள் எல்லாம் உணர்த்தல் வேண்டும் எனின், அது முதல் கரு உரிப்பொருள் எனத் தொகை நிலையால் அடங்கும்" என்று கூறியுள்ளார். இவ்வாறு பொருள் என்பதற்கு இளம்பூரணர் கூறிய விளக்கம் அறிஞரால் கருதி உணரத்தக்கது. சொல்லானது பொருளை உணர்த்துகின்றது' என்னும் உண்மை எந்த நாட்டு அறிஞரும் ஒத்துக்கொள்ளும் ஒரு உண்மைக் கருத்தாகும். சைவ சமயத்தில் சொல்லைச் சத்தியாகவும் பொருளைச் சிவமாகவும் கூறுகின்ற முறை உண்டு. இடைக்காடர் என்னும் புலவரொருவர் பாண்டிய மன்னன் ஒருவன் மேல் பாடல் புனைந்துகொண்டு சென்றார். அப்பாண்டியன் அதனைக் கேட்காமல் புலவரை இகழ்ந்து அனுப்பிவிட்டான். அப்புலவர் மிகவும் வருந்தி மதுரையில் சொக்கநாதன் கடவுளைக் கண்டு "மன்னிய சொல் உன் மாது: மாசறு பொருள் நீ" என்று குறிப்பிட்டுச் சொல் வடிவாகிய சத்தியையும், பொருள் வடிவாகிய உன்னையும் பாண்டியன் இகழ்ந்தான் என்று கூறினார் என்ற கதை நம்பி திருவிளையாடலில் கூறப்பட் டுள்ளது. மதுரையிலே இருந்தது தமிழ்ச்சங்கம். அச்சங்கத்திலே இருந்த புலவர்கள் அழகான தமிழ்ப்பாடல்களைப் பாடினர். அத்தமிழ்ப்பாடல்கள் சொல்லாகிய பொலிவுள்ள மலரைத் தோன்றச் செய்து பொருள் என்னும் தாது நறுமணத்தைத் தருதலால் அப்பாடல்கள் மல்லிகை மாலையை ஒத்துள்ளதாம். சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின் வண்டார் கமழ்தாம மன்றே மலையாத தண்டாரான் கூடற் றமிழ் (பட்டினப்பாலையின் ஈற்றிலுள்ள பாடல்)