பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 என்று, சொல்லிலே உள்ள பொருள் மணத்தைக் கூறுகின்றார் ஒரு புலவர். பொருளிலக்கணம் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி இலக்கணம் எழுதினார். அவற்றுள் ஒன்று பொரு ளிலக்கணம் ஆகும். "எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம் பெறேமெனின், இவை பெற்றும் பெற்றிலேம் எனச் சொல்லா நிற்ப" என்னும் இறையனார் களவியல் உரைப் பகுதியால் பொருளதிகாரத்தின் சிறப்பை உணரலாம். "உலகியல் நிறுத்தும் பொருள் மரபு" என்று கல்லாடம் என்னும் இலக்கியம் பொருளிலக்கத்தினைச் சிறப்பிக்கின்றது. பொருளிலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறும் முறை மேற்கூறிய பொருண்மரபினைத் தொல்காப்பியர் எவ்வாறு கூறுகின்றார்? என்பதை ஆராய்வோம். மக்கள்தம் மனத்தில் எழும் காம உணர்ச்சியே உலகத்திலெழும் எல்லாப் பொருளுக்கும் காரணம் என்பது தொல்காப்பியர் தம் கருத்தாகும். காமம் என்னும் சொல் பொருளதிகாரத்தில் பல இடங்களில் தொல்காப்பியரால் எடுத்தாளப்பட்டுள்ளது. அகத்திணையியலில் முதல் நூற்பாவில் காமத்தைக் கைக் கிளை, ஐந்திணை, பெருந்தினை என அவர் மூன்றாகப் பிரித்துள்ளார். காமத்தின் பிரிவு ஒருவன் ஒருத்தியினிடத்திலே جاتا۔ தோன்றும் காம உணர்வை, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் ஒத்த காமம் என்றும், ஒருவன் விரும்பி ஒருத்தி விரும்பாததும் ஒருத்தி விரும்பி ஒருவன் விரும்பாததும் ஆகிய ஒருபாற் காமமென்றும், ஒருவரை ஒருவர் விரும்பாத பொருந்தாக் காமமென்றும் மூன்றாகப் பிரிக்கலாம். இம்மூன்றுள் ஒருபாற் காமம் கைக்கிளை என்று வழங்கலாயிற்று.