பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 முக்காலாக வரல் வேண்டும் கோப்பாளி என்பது கோப்பாளம் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகும். கோப்பாளம் - பிச்சை, 'பாம்பாட்டி' என்பது பாம்பினை ஆட்டுபவன் மகுடி (யெக்கிக் கூறும் பாட்டு. பாம்பு ஆடும் ஆட்டத்திற்குத் தகுதி யாகத் தாளம் இருக்கும். சிந்து, வாமனரூபம் என்பது குள்ளர்கள் கூறும்பாட்டு. விகடம், நகைச்சுவைக் கூத்திற்கு ஏற்ற பாட்டு விகாடங்கம். நெடும்பத்திரம் - நீண்ட வாளை வீசி ஆடுவதற்குரிய பாட்டு, கொற்றி - கொற்றவை வேடங்கொண்டாடுபவர் சிந்து - சித்தராடல் குரவை - குரவைக்கூத்து பித்தன் - பித்துக் கொண்டவன் நடிப்பு பிழுக்கை, குடப்பிழுக்கை, பாண்டிப் பிழுக்கை, பெரும்பிழுக்கை என்னும் முற்றேவலர் வேடம் கொண்டு ஆடும் ஒருவகைக் கூத்து. கட்களி - கள்ளைக் குடித்தவன் வேடத்தில் ஆடும் -Էլ -ւհ கோல்கூத்து - கோலாட்டம் திருவாசகத்தில் அம்மனையும், தனிவண்டும் (திருக்கோத்தும்பி) சாழலும், உந்தியும் வந்துள்ளன. குதிரை பொய்க்கால் குதிரையாட்டம்.