பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 செவியில் தேறும் திறன் தோற்றுவாய் பிங்கலம் என்ற நிகண்டின் ஆசிரியர்தம் நூலுள் பண்பிற் செயலின் பகுதி வகையுள் 'செவிவகை என்ற ஒன்றைக் கூறுகிறார். அவ்வகையின் தொடக்கத்திலுள்ள நூற்பா செவியினால் அறிந்து தெளிபவைக்குப் பெயர் கூறுகின்றது. செவியில் தேறும் திறன்.இனி துரைக்கின் உறுதியும் கேள்வியும் ஒதியும் கலையும் பனுவலும் கல்விப் பெயரெனப் பகரும் மேற்கண்ட நூற்பா, செவியில் தேறும் திறனாகிய கல்வி உறுதி என்றும் கேள்வி என்றும் ஓதி என்றும் கலை என்றும் பனுவல் என்றும் பெயர்பெறும் என்பதையும் கூறுகின்றது. இவை காரணப் பெயராகும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறத்தக்க பொருளை உறச் செய்த லால் உறுதி என்றும், கேட்கப்படும் பொருளைக் கேட்கச் செய்தலால் கேள்வி என்றும், ஒதி உணரவேண்டிய பொருளை ஒதச் செய்தலால் ஒதி என்றும் கற்க வேண்டிய பொருளைக் கற்கச் செய்தலால் கலை என்றும், பன்ன வேண்டிய பொருளைப் பன்னச் செய்தலால் பனுவல் என்றும் கருவி கருத்தவாகக் கொண்டு காரணம் உணர்க. அன்றியே உறப்படுவது உறுதி, கேட்கப்படுவது கேள்வி, ஒதப்படுவது ஒதி, கற்கப்படுவது கலை, பன்னப்படுவது பனுவல் எனக் கருமமாகவும் கூறலாம். மேற்கண்ட ஐந்துள் மிகுதியும் வழக்கிலிருப்பவை கேள்வி, கலை, பனுவல் என்னும் மூன்றுமாம். செவியினால் தேறுவது செவியினால் தேறுவது, அல்லது அறிவது ஒசை ஒலி என்னும் இரண்டினை மட்டுந்தான் என்று நாம் கருது கிறோம். ஆனால் பிங்கல நிகண்டாசிரியர் ஐம்புல அறிவையும் செவி அறிகின்றது என்று கொண்டு, ஐம்புல அறிவையும் செவி அறிகின்றது என்று கூறுகிறார்.