பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சேரிமொழியால் பொருள் புலப்படச் சென்று நடப்பின் இழைபென்று சொல்லப்படும் என்று கூறி, அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பது என்று இளம்பூரணர் முதலான மூவர் கருத்திற்கு முற்றிலும் மாறுபடப் புதுப்பொருள் எழுதுவர். அம்மை முதலிய எட்டினைப் பற்றிய கருத்து இளம்பூரணர் நூற்பாக்களுக்கு ஆற்றொழுக்கு முறை யில் நேரிதாகப் பொருள் எழுதுவதில் சிறந்தவர். அவரும், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும், காரிகையுரையாசிரி யரும் அம்மை முதலியன தனிச்செய்யுளின் வனப்பைக் கருதி எழுந்தென்றே கருதுகின்றனர். வலிந்து, தம்மனத்தில் வனப்பைக் கருதி எழுந்ததென்றே கருதுகின்றனர். வலிந்து, தம்மனத்தில் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கியையப் பொருளெழுதும் நச்சினார்க்கினியர் பேராசிரியர் முதலியோர் அம்மை முதலியன தொடர்நிலைச் செய்யுளைப் பற்றி எழுந்ததென்று கருதுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் தொடர்நிலைச் செய்யுள்கள் (காப்பியம்) இருந்தனவா என்பது சரியாக நிலைநாட்டப்படவில்லை. ஆகையினாலே இளம்பூரணர் முதலியோர் கருத்தே தகுதி யுடையதாயிருக்க வேண்டும்.