பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 தொல்காப்பியர் பகைவர் நாட்டைக் கவர்தல் கருதிச் செய்கின்ற போருக்கு வஞ்சி என்று பெயர் சூட்டி அது முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனாய் வரும் என்று கூறியுள்ளார். அவர் பகைவன் வாழும் நகரத்தை முற்றுகை யிட்டு அந்நகரத்தின் அரண்கள் பலவற்றையும் அழித்துப் பகைவன் வாழும் மனையகத்துச் சுற்றி அவனை அழிக்கின்ற பேருக்கு உழிஞை என்று பெயர்தந்து, அது மருதம் என்ற அகத்திணையில் புறனாம் என்பர். பகைவன்றன் நாட்டினைப் பliறவும், அவனை அழிக்கவும் செய்யப்படும் போர்களை பன்றி, ஆற்றல் வாய்ந்த இரண்டு பேரரசர் உறழ்ந்து தம் ஆற்றலின் மிகுதியை நிலைநாட்ட வேண்டிக் களம் குறித்துக் காலங்குறித்துப் போர் செய்வர். தொல்காப்பியர் இதனைத் தும்பை என்று கூறி இது நெய்தல் என்னும் அகத்திணையின் புறனாம் என்பர். அவர் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் நான்கினையும் போர்க்குரிய புறத்திணையாகக் கூறி, இவை வேந்தர்க்கு உரியனவாகும் என்றனர். ஆனால், ஏனைய மூன்று திணைகளைப் பற்றிக் கூறும்பொழுது வேந்தர்க் கென்றோ மக்களுக்கென்றோ கூறாமல், பொதுவாகக் கூறிச் செல்கின்றார். அரசன் ஒருவன் போர் செய்து வெற்றியடைதல் வாகை என்று கூறாமல் அரசராயினும் மக்களாயினும் தாம் தாம் செய்யும் தொழிற் கூறுபாட்டில் ஒப்புணர்ச்சியின்றி, உறழ் 1. வெட்சியைக் கூறும்பொழுது வேந்துவிடு முனைஞர்" என்று கூறியுள்ளார். வஞ்சியைக் கூறும் பொழுது வேந்தனை வேlதன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே எ.!றனர். உழிஞையைக் கூறும்பொழுது வேந்தன் என்று கூறாவிடினும் முன்திணை நூற்பாவிலுள்ள சொல்லை வருவித்து ஒருவேந்தன் மற்றொரு வேந்தனுடைய முழுமுதல் அணை முற்றலும் கோடலும் என்று கொள்ளுமாறு வேlதரி செயலின் இடை வைத்தார். தும்பையைக் கூறும் பொழுது " மைந்து பொருளாக வந்து வேந்தனைச் சென்று தலையழிக்கும் சிறப்பிற்று" என்றனர்.