பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 வுணர்ச்சி கொண்டு மிக்கு விளங்குதல் வாகை என்று பெயர் பெறும். இது பாலைத் திணைக்குப் புறனாகும் என்கின்றனர். அகத்தினை உலகில் பாலைத்திணை மிக மிகச் சிறந்ததாகும். எதனால் எனின்? ஒரு தலைவனும் தலைவியும் கூடி இன்பம் துய்க்கின்றனர். அந்த இன்பத்தையே இருவரும் கருதினால், மனையில் நீங்கி நாட்டில் நீங்கித் தொழில் செய்ய முடியாத நிலை தலைவனுக்கு ஏற்ப டுகின்றது. தலைவன் இன்பத்தையே கருதித் தொழில் செய்யாதவனாயிருப்பின் தங்கள் வாழ்வினையும் நன்கு நடத்த முடியாமையுடன் உற்றார் உறவினர்க்கும் உதவ முடியாத நிலையை அடைகின்றான். இவன் இன்பத்தை விரும்பாமல் தொழிலை விரும்பிடில் அவனுக்கு எல்லா வகையான பொருள்களும் எளிதில் கிடைக்கிறது. அப்பொருளால் தங்கள் குடும்ப வாழ்வும் சிறப்படைகிறது: உறவினர் வாழ்வும் சிறப்படைகிறது. இதனை நன்கு கருதிய திருவள்ளுவர், இன்பம் விழையான் வினைவிழைவான் தம் கேளிர் துன்பம் துடைத்துான்றும் தூண். என்ற அருமையான திருக்குறளைப் படைத்துள்ளனர். இன்பம் விழைபவன் வினைவிழையான் வினை விழையா விடில் கேளிர்தம்துன்பத்தைப் போக்க இயலாதவனாகிறான். அதனால் தலைவியிடத்தே தான் துய்க்கும் இன்பத்தைக் கருதாமல் தலைவன் பிரிதல் வேண்டும். பிரிந்து வினையே ஆடவற்கு உயிரே என்று சிறப்பித்த வினையை நன்றாக, பலர் செய்யும் வினையில் சிறந்ததாகச் செய்ய வேண்டும். தொல்காப்பியர் தலைவன் வினை செய்தற்காகத் தலைவியைப் பிரிதலைப் பாலை என்று கூறிப் பிரிந்த தலைவன் தொழில் செய்து மேம்படுதலை வாகை என்று கூறுகின்றார். பாலையொழுக்கமும் வாகை யொழுக்கமும் எந்த நாட்டில் இல்லை. தமிழிலக்கியத்தில் பாலையும் வாகையுமே மிகுதியாக உள்ளன. "கைக்கிளை செந்திறம் பெருந்தினை நோந்திறம்" என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டும் நூற்பாவின்படி,