பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 1. அகத்திணையியல் - 58) பெருந்திணைக் காமம் துன்பம் பயப்ப வரும் என்று உணர்கின்றோம். அத்துன்பக் காமத்தி லிருந்து யாக்கை நிலையாமை இளமை நிலையாமை செல்வம் நிலையாமை முதலான, நிலைபேறில்லாமையைப் பற்றிய துன்ப உணர்ச்சி தோன்றுகின்றது. இது காஞ்சி என்னும் புறத்திணையாம் என்கின்றார். கைக்கிளை சிறிய அல்லது ஒருபாற் காமமாயினும் செந்திறம் . என்று கூறப்பட்டு ஒருபாலார்க்கு இன்பம் பயப்ப வரும் என்பர். அவ்வொருதலைக் காமத்திலிருந்து ஆண்மையுடையானைப் புகழ்ந்து பாடுகின்ற புகழ்ச்சிவகை என்னும் இன்ப உணர்ச்சி தோன்றுகின்றது. இதனைப் ப_ாண் திணை என்கின்றார். முடிவுரை எனவே தொல்காப்பியர் பாடலுள் வருகின்ற பொருளெல்லாம் முதல், கரு, உரி, என்ற மூன்று பகுப்புள் அ_ங்கும் எனவும், முதற்பொருள் என்பது எடுத்துக் கொண்ட பொருளுக்கு இடமாய்ப் பொருள் நிகழ்வைக் _றும் என்பதும், கருப்பொருளாகிய இறைச்சிப் பொருள் ரிப்பொருளுக்கு அடையாகி வரும் என்பதும், உரிப் பொருள் என்பது மக்கள் சமுதாயத்திற்கெல்லாம் உரிய பொருளாய் அகத்திணை புறத்திணை என்று பிரிக்கப்பட்டு ஒருபாற் காமமாய் ஐந்தாகப் பிரித்தோதுதற்குரிய ஐந் நினைக் காமமாகியும் ஒவ்வாக் காமமாகிய பெருந்தினைக் காமமாகியும் அகத்திணையில் வரும் என்பதும், அகத் னைக் காமத்தானே புறத்திணையில் போரின் முன் நிகழ்ச்சியாகிய வெட்சி என்றும், பகைவர் மண்ணைப் பliறும் வஞ்சி என்றும், பகைவரை அழிக்கும் உழிஞை _றும், ஆற்றலை அழிக்கும் தும்பை என்றும், எல்லா மக்களுடைய வினை மிகுதியைக் கூறும் வாகை என்றும், நிலையாமையைக் கூறும் காஞ்சி என்றும், புகழ்ச்சியைக் _றும் பாடாண் திணை என்றும் பாடுபொருள் பதினான் காகப் பகுத்தோதப்பட்டுள்ளன. இப்பதினான்குள் அடங்காத பொருள் உலகத்தில் எதுவும் இல்லை என்க.