பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நூற்கு உரை கூறுதல் பொது உரை என்பது - தொல்காப்பியர் கூறுவது தொல்காப்பியர் நூலுக்கு இலக்கணம் கூறுமிடத்து, "உண்ணின்று அகன்ற உரையொடு புணர்ந்து" என்று கூறியுள்ளார். இதனாலே நூலின் அகத்துநின்றும் விரிந்து உரையுடன் கூடி நிற்பது நூல் என்பது பெற்றாம். உரை இருவகை தொல்காப்பியர் மேற்கூறிய உரையினைக் காண்டிகை என்றும், உரை (விருத்தியுரை) என்றும் மரபியலில் இரு வகையாக வகுத்தோதுவர். பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும் (மரபியல் -103) குற்றமில்லாத சூத்திரத்தில் உள்ள பொருள்களை யெல்லாம் விடாமல் கூறுவது காண்டிகையுரையாகும். சூத்திரப் பொருளைக் காணச்செய்வது என்று பொரு ளுடையது. விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே (தொல் - மரபியல் - 104) சூத்திரத்திற் படும் சொற்பொருளை விட்டு நீங்குதலின்றி, விரிவோடே பொருந்தி, சூத்திரப்பொருளைக் காரணங் காட்டியும், எடுத்துக்காட்டுக் கூறியும் உண்மைப்பொருளை உணர்த்துவதாக அக் காண்டிகை உரை அமையவேண்டும் என்பர். இரண்டாவதாய் இயம்பின உரை (விரிவுரை) என்பது குத்திரத்துட் பொருளொழியவும், அந்நூலகத்துக் கூறிய